ADDED : செப் 10, 2026 07:28 AM

ஸ்ரீலீலா.ஆர், தேவனஹள்ளி, பெங்களூரு: திருமணம் தட்டிக் கொண்டே செல்கிறது... தீர்வு என்ன?
விநாயகருக்கு தினமும் அருகம்புல் மாலையை சாற்றுங்கள். அவரே திருமணத்தை நடத்தி வைப்பார்.
மரகதம்.எம், மயிலாப்பூர், சென்னை: விநாயகருக்கு அருகம்புல் சாத்துவது ஏன்?
அசுரனான அனலை விழுங்கியதால் விநாயகரின் வயிறு நெருப்பாக கொதித்தது. அந்த நெருப்பை தேவர்களும், முனிவர்களும் அருகம்புல்லைக் கொண்டு அணைத்தனர்.
ராம்.ரா, திருவிதாங்கோடு, கன்னியாகுமரி: விநாயகருக்கு பிடித்த நைவேத்யம்...
மோதகம், கொழுக்கட்டை, அதிரசம், பணியாரம், அவல், பொரி, பழங்கள் என நீங்கள் வைப்பதை சந்தோஷமாக அவர் ஏற்பார்.
சரவணன்.கோ, திருநள்ளாறு, புதுச்சேரி: விநாயகர் என்றால்...
வி - மேலானவர்
நாயகர் - தலைவர்
கீர்த்தி.மா, வால்பாறை, கோயம்புத்துார்: கோயில்களில் இரட்டைப்பிள்ளையார் இருக்கிறாரே...
தடையும் நானே, போக்குவதும் நானே' என்கிறார் இரட்டைப்பிள்ளையார். இவரை வழிபட்டால் இரு மடங்கு நன்மை கிடைக்கும்.
கோபால்.வி, கமுதி, ராமநாதபுரம்: பிள்ளையார் என ஏன் அழைக்கிறோம்?
பெற்றோரை வலம் வந்தவர் என்பதால் 'பிள்ளை யார்'என அழைக்கிறோம்.
ரவிபிரசாத்.பா, வள்ளியூர், திருநெல்வேலி: விநாயகர் அர்ச்சனைக்கு ஏற்ற பூக்கள்...
அருகம்புல், வில்வம், வெள்ளெருக்கு, தும்பை
மணி.எஸ், செவ்வாய்பேட்டை, திருவள்ளுர்: மனிதமுக விநாயகர் எங்கிருக்கிறார்?
திருவாரூர் மாவட்டம் (பூந்தோட்டம்) சிதலப்பதி முக்தீஸ்வரர் கோயிலில் இருக்கிறார்.
அன்பு.வே, ஆண்டிபட்டி, தேனி: விநாயகரை எந்த நாளில் வழிபடலாம்?
மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியில்.
