தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/குட்டி குட்டி தகவல்கள்

குட்டி குட்டி தகவல்கள்

குட்டி குட்டி தகவல்கள்


ADDED : செப் 10, 2026 07:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2026 07:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஆனி பவுர்ணமியில் மீனாட்சிக்கு உச்சிக்காலத்தில் மா, பலா, வாழை என முக்கனிகளால் அபிஷேகம் செய்கின்றனர். பல கூடைகளில் நிரம்பியிருக்கும்

* மீனாட்சியம்மனுக்கு பெற்றோர் இட்ட பெயர் தடாதகை பிராட்டியார்.

* மதுரையில் மீனாட்சியின் வைர மூக்குத்தி தரிசனம் மிக விசேஷமானது. இவளை வைர கிரீடம் அணிந்த அலங்காரத்தில் சித்திரைப்பிறப்பு, ஆங்கிலப்புத்தாண்டு, தை அமாவாசை நாட்களில் மட்டுமே தரிசிக்க முடியும்.

* மீனாட்சி சன்னதி எதிரிலுள்ள கோபுரம் அதிக சிற்ப வேலைப்பாடுகளுடன் கொண்டதால் 'சித்திர கோபுரம்' என அழைக்கப்படுகிறது. இதிலுள்ள 25 முகம் கொண்ட சிவன் சிற்பம் கலைநயம் மிக்கது.

* மீனாட்சி அம்மன் சன்னதியின் பிரகாரத்தில் திருமலைநாயக்கரின் சிலை உள்ளது.

* மீனாட்சியம்மன் சன்னதி எதிரில் கிளிக்கூட்டு மண்டப துாண்களில் ராமாயண, மகாபாரத பாத்திரங்களான அர்ஜுனன், கர்ணன், பீமன், நகுலன், சகாதேவன், வாலி, சுக்ரீவன் சிற்பங்கள் உள்ளன.

* பொற்றாமரைக்குளத்தின் வடக்கு கரையில் உள்ள துாண்களில் மதுரை நகரை நிர்மாணித்த குலசேகர பாண்டியன், அமைச்சர் தனஞ்ஜெயன் சிலைகள் உள்ளன.

* கிழக்கு வாசல் வழியாக சன்னதிக்குள் நுழையும் பாதையிலுள்ள முதலிப்பிள்ளை மண்டபத்தில் தாருகாவனத்து ரிஷிகள், பிட்சாடனாராக வந்த சிவன், ரிஷிபத்தினிகள், மோகினி வேடத்தில் திருமால் சிற்பங்கள் கலைநயம் மிக்கவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us