sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : நவ 17, 2023 01:15 PM

Google News

ADDED : நவ 17, 2023 01:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.பிரேமா, குண்டுலுபேட், மைசூரு.

*சஷ்டியன்று விரதம் இருந்தால்...

முருகப்பெருமான் அருளால் நீண்ட ஆயுள், உடல்நலம் பெறுவீர்கள். அழகும், அறிவும் கொண்ட குழந்தை பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.

பி.மைதிலி, வில்லிவாக்கம், சென்னை.

*கந்த புராணம் பற்றிச் சொல்லுங்கள்.

கச்சியப்ப சிவாச்சாரியார் என்னும் பக்தருக்கு பாடலின் முதல் அடியை முருகனே எடுத்துக் கொடுத்த நுால் கந்தபுராணம். தினமும் பாடல் எழுதி முருகனின் திருவடியில் வைக்க, சுவாமியே திருத்திக் கொடுத்தார். தெய்வீகமான இதை படிப்பதும், கேட்பதும் புண்ணியம்.

எல்.குமார், சுரண்டை, திருநெல்வேலி.

*சுயம்பு மூர்த்தியாக முருகன் அருள்புரியும் கோயில் எது?

கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள கொளஞ்சியப்பர் கோயில்.

வி.வத்சலா, மெரோலி, டில்லி.

*முருகனுக்கு உரியதாக சஷ்டி இருப்பது ஏன்?

சஷ்டி என்றால் '6'. ஆறுமுகங்களை கொண்டவர் முருகன். அவரை வளர்த்தது ஆறு கார்த்திகைப் பெண்கள். ஐப்பசி வளர்பிறை ஆறாம்நாளன்று (கந்தசஷ்டி) சூரபத்மனை வதம் செய்தார். இதனால் முருகனுக்கு உரியதாக சஷ்டி உள்ளது.

எம்.விஜயராகவன், கொல்லங்கோடு, கன்னியாகுமரி.

*சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்கிறார்களே... பொருள் என்ன?

சட்டி என்றால் சஷ்டி விரதம், அகப்பை என்றால் கர்ப்பப்பை. அன்று விரதமிருந்தால் வயிற்றில் கரு தங்கும். அதாவது குழந்தைப்பேறு கிடைக்கும்.

எம்.சீனிவாசன், தேவதானப்பட்டி, தேனி.

*வேல் சொல்லும் தத்துவம் என்ன?

ஞானத்தின் அடையாளம் வேல். கூர்மை, அகலம், ஆழம் ஆகிய குணங்களைக் கொண்ட வேலை வழிபட முருகன் அருள் கிடைக்கும்.

வி.முத்தரசி, ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி.

*சஷ்டிதேவி என்பது யார்?

முருகனின் மனைவியான தெய்வானையின் பெயர்களில் சஷ்டிதேவியும் ஒன்று. ஆயுள் காலத்தை நிர்ணயிக்கும் தேவதையை(பெண் தெய்வம்) இப்பெயரால் குறிப்பிடுவர்.

என்.புவனேஸ்வரன், பந்தலுார், நீலகிரி.

*முருகனின் புகழ் பாடுவதில் சிறந்த நுால் எது?

முருக பக்தரான அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்.

ஆர்.கோதை, எழுமலை, மதுரை.

*பழநியில் உள்ள நவபாஷாண சிலை பற்றி சொல்லுங்கள்.

ஒன்பது மூலிகைகளின் கலவையே நவபாஷாணம். போகர் என்னும் சித்தர் உருவாக்கிய சிலையே பழநி தண்டாயுதபாணி.

எல்.கதிரேசன், மதுராந்தகம், செங்கல்பட்டு.

*செவ்வேள், செவ்வேல் - சரியான சொல் எது?

செவ்வேள் என்றால் சிவந்த அழகன். செவ்வேல் என்றால் சிவந்த வேல். இரண்டும் சரியானதே.






      Dinamalar
      Follow us