sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : நவ 24, 2023 03:51 PM

Google News

ADDED : நவ 24, 2023 03:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவ. 24 கார்த்திகை 8: முகூர்த்த நாள். பிரதோஷம். சகல சிவன் கோயில்களிலும் மாலை நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை. வாஸ்து நேரம் (காலை 11:29 - 12:05 மணி). இன்று செடி கொடி வைக்க நன்று.

நவ. 25 கார்த்திகை 9: பரணி தீபம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு. திருநள்ளாறு, குச்சனுார், இலத்துார் தலங்களில் சனிபகவானுக்கு சிறப்பு அபிேஷகம். திருப்பரங்குன்றம், சுவாமிமலை முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் பவனி.

நவ. 26 கார்த்திகை 10: திருக்கார்த்திகை. பிருந்தாவன பூஜை, எல்லா கோயில்களிலும் சொக்கப்பனை ஏற்றுதல். கணம்புல்ல நாயனார் குருபூஜை. கரிநாள்.

நவ. 27 கார்த்திகை 11: பவுர்ணமி. கார்த்திகை சோம வாரம். பாஞ்சராத்ர தீபம். அஹோபிலமடம் 5 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். சுதர்ன ஜெயந்தி. திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம். நத்தம் மாரியம்மன் லட்சதீபக்காட்சி.

நவ. 28 கார்த்திகை 12: திருவண்ணாமலை அபிதகுசாம்பிகை, அருணாச்சலேஸ்வரர் மலையை சுற்றி வருதல். மன்னார்குடி ராஜ கோபால சுவாமி புறப்பாடு. திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம்.

நவ. 29 கார்த்திகை 13: முகூர்த்த நாள். திருவண்ணாமலை சுப்பிரமணியர் தெப்பம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். இன்று செடி கொடி வைக்க நன்று.

நவ. 30 கார்த்திகை 14: சங்கடஹரசதுர்த்தி. திருவாதிரை விரதம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவர் கூட புறப்பாடு.






      Dinamalar
      Follow us