
கே.லதா, ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.
*பணக்கஷ்டத்திற்கு தீர்வு சொல்லுங்கள்
கார்த்திகையன்று விரதமிருந்து முருகன் கோயிலில் விளக்கேற்றுங்கள். மலைக்கோயிலாக இருந்தால் கிரிவலம் செல்லுங்கள்.
எல்.கார்த்திகேயன், ராதாபுரம், திருநெல்வேலி.
*பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது ஏன்
பொன் என்பது பணத்தையும், புதன் என்பது அறிவையும் குறிக்கும். கல்வியை பெறுவது அரிய விஷயம் என்பது இதன் பொருள்.
டி.மித்ரா, வாஸ்காஸ், டில்லி.
*தெய்வங்கள் இடையே உறவுமுறை இருப்பது ஏன்?
மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்த, தெய்வங்கள் தங்களுக்குள் உறவுமுறைகளை ஏற்படுத்தி வாழ்ந்து காட்டினர். உதாரணமாக மகாவிஷ்ணுவும், பார்வதியும் அண்ணன் தங்கை உறவு.
வி.கண்ணம்மா, வில்லுக்குறி, கன்னியாகுமரி.
*என் வீட்டு வாசலில் பசு சாணமிட்டது. இது நல்லதா?
இது நல்ல சகுனம். அப்போது பசுவுக்கு வாழைப்பழம், கீரை கொடுப்பது விசேஷம்.
எஸ்.ரேணுகா, மடிக்கேரி, மைசூரு.
*பிரம்ம முகூர்த்த நேரத்தில் என்ன செய்யலாம்?
அதிகாலை 4:30 - 6:00 மணி பிரம்ம முகூர்த்தம். அப்போது யோகாசனம், பிராணயாமம், தியானம், ஜபம், பூஜைகள் செய்யலாம்.
எம்.பவானி, கள்ளிக்குடி, மதுரை.
*காமாட்சி விளக்கை வீட்டில் ஏற்றலாமா?
காமாட்சி விளக்கு ஏற்றும் வீட்டில் தெய்வம் குடியிருக்கும்.
ஆர்.அனன்யா, ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி.
*குழலுாதும் கிருஷ்ணர் படம் பூஜையறையில் இருக்கலாமா...
குழலுாதியபடி பசுக்களை மேய்த்தார் கிருஷ்ணர். அதனால் வள்ளல் போல பசுக்கள் பாலைச் சொரிந்தன. கிருஷ்ணர் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி இருப்பாள்.
எஸ்.அபினவ், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்.
*நாலும் தெரிஞ்சா நல்லா இருக்கலாம் என்கிறார்களே...
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பவையே அவை. இதை 'புருஷார்த்தம்' என சொல்வர். தர்மவழியில் வாழ்தல், நேர்மையாக சம்பாதித்தல், மனைவி, குழந்தைகளுடன் வாழ்தல், கடவுளை சரணடைந்து மோட்சம் அடைதல்.
சி.கிருத்திகா, பெதப்பம்பட்டி, திருப்பூர்.
*அரசமரத்தடியில் நாகர் சிலை இருப்பது ஏன்?
ஜாதகத்தில் நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை, குழந்தையின்மை,
அற்ப ஆயுள் உண்டாகும். இதிலிருந்து விடுபட அரச மரத்தடியில் நாகர் சிலையை பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபடுவர்.
எம்.பரத், வில்லிவாக்கம், சென்னை.
*கிரிவலம் ஒருமுறைக்கு மேல் சுற்றலாமா?
மலையைப் பொறுத்து எண்ணிக்கை மாறும். திருவண்ணாமலையை ஒருமுறை சுற்றவே மூச்சு வாங்கும். சிறிய மலைகளை மூன்று முறை சுற்றலாம்.