
ஜன.19 தை 5: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சைவ சமய ஸ்தாபித லீலை. கோவை பால தண்டாயுதபாணி சூரிய பிரபையிலும், திருப்பரங்குன்றம் முருகன் பச்சைக் குதிரை வாகனத்திலும் பவனி. திருப்புடைமருதுார் சிவபெருமான் வெள்ளி ரிஷப சேவை. பைம்பொழில் முருகன் சிம்ம வாகனம்.
ஜன.20 தை 6: கார்த்திகை விரதம். திருப்பரங்குன்றம் முருகன் வைரத்தேரிலும், குன்றக்குடி முருகன் வெள்ளி கேடயத்திலும் பவனி. திருப்புடைமருதுார் சிவபெருமான் குதிரை வாகனம், அம்பாள் காமதேனு வாகனம். மருதமலை, கழுகுமலை, பைம்பொழில் தலங்களில் முருகன் புறப்பாடு.
ஜன.21 தை 7: முகூர்த்த நாள். ஏகாதசி விரதம். திருப்பரங்குன்றம் முருகன் தெப்ப உற்ஸவம். திருப்புடைமருதுார் சிவபெருமான் குதிரை வாகனத்தில் பவனி. காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் புறப்பாடு.
ஜன.22 தை 8: முகூர்த்த நாள். திருநெல்வேலி நெல்லையப்பர் பவனி. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஸப்தாவர்ணம். பழநி முருகன் வெள்ளி கேடயத்தில் புறப்பாடு. கண்ணப்பநாயனார் குருபூஜை.
ஜன.23 தை 9: பிரதோஷம். சிவபெருமான் கோயில்களில் மாலையில் நந்தீஸ்வரருக்கு அபிேஷக, ஆராதனை. திருச்சேறை சாரநாதர் திருக்கல்யாணம். அரிவாட்டாய நாயனார் குருபூஜை.
ஜன.24 தை 10: முகூர்த்த நாள். கோவை பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம். குன்றக்குடி, திருப்புடைமருதுார், திருவிடைமருதுார் கோயில்களில் தேர். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கப்பல்லக்கில் நாட்கதிரறுப்பு விழா.
ஜன.25 தை 11: தைப்பூசம். பவுர்ணமி, வடசாவித்திரி விரதம். காஞ்சி பெருந்தேவி தெப்பம். ஸ்ரீமுஷ்ணம் சுவேத நதித்தீர்த்தம். வடலுார் வள்ளலார் அருட்பெருட்ஜோதி தரிசனம். சென்னை கபாலீஸ்வரர் சிங்கார வேலவர் கோயில் தெப்ப உற்ஸவம். சேந்தனார் குருபூஜை. கரிநாள்.