
பிப்.16 மாசி 4: ரத சப்தமி. கார்த்திகை, சூரிய சந்திர விரதம். திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள், குடந்தை சக்கரபாணி உற்ஸவம் ஆரம்பம். காங்கேயம் முருகப்பெருமான் மயில் வாகனம். திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் மரத் தோளுக்கினியானில் புறப்பாடு. மதுரை கூடலழகர் ஆண்டாள் திருக்கோலம்.
பிப்.17 மாசி 5: திருச்செந்துார் முருகன் தங்கமுத்துக்கிடா வாகனம், அம்பாள் வெள்ளி அன்ன வாகனம். திருப்போரூர் முருகப்பெருமான் பிரணவ மந்திரம் உபதேசியருளிய காட்சி. பெருவயல் முருகப்பெருமான் கைலாச வாகனத்தில் புறப்பாடு.
பிப்.18 மாசி 6: மதுரை கூடலழகர் கஜேந்திர மோட்சம். திருத்தணி முருகப்பெருமான் பல்லக்கு. காரமடை அரங்கநாதர் உற்ஸவம் ஆரம்பம். மதுரை இம்மையில் நன்மை தருவார் கேடய சப்பரம். வள்ளிமலை முருகப்பெருமான் பவனி.
பிப்.19 மாசி 7: முகூர்த்த நாள். காங்கேயம் முருகப்பெருமான் தெய்வானை திருமணம். குடந்தை ஆதிகும்பேஸ்வரர் மரத்தோளுக்கினியானில் பவனி. திருக்கச்சிநம்பி திருநட்சத்திரம்.
பிப்.20 மாசி 8: ஏகாதசி விரதம். கோயம்புத்துார் கோனியம்மன், ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் உற்ஸவம் ஆரம்பம். திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமார் நினைவு நாள்.
பிப்.21 மாசி 9: முகூர்த்த நாள். பிரதோஷம். வராஹ சதுர்த்தி. குலசேகராழ்வார் திருநட்சத்திரம். திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் சூர்ணாபிேஷகம். திருச்செந்துார் முருகப்பெருமான் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாற்றி புறப்பாடு.
பிப்.22 மாசி 10: முகூர்த்த நாள். திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில்களில் தேர். மதுரை கூடலழகர் உபய நாச்சிமார்களுடன் தங்க சிவிகையில் ஏகாந்த சேவை.