
மார்ச் 8 மாசி 25: முகூர்த்த நாள். பிரதோஷம். மகாசிவராத்திரி. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி, அம்பாள் வெள்ளித் தேர். ஸ்ரீசைலம், திருக்கோகர்ணம், காளஹஸ்தி, திருவைகாவூர் தலங்களில் சிவபெருமான் ரிஷப சேவை. கடம்பூர் சண்முகநாதர் கோயிலில் ஆறுகால பூஜை, திருவண்ணாமலை அடிமுடி தேடியருளிய திருவிளையாடல், லிங்கோத்பவ தரிசனம்.
மார்ச் 9 மாசி 26: ஸ்ரீசைலம், காளஹஸ்தி, திருக்கோகர்ணம், திருவைக்காவூர் தலங்களில் சிவபெருமான் தேர். திருவாரூர் தியாகராஜர் பவனி, ராமேஸ்வரம் சுவாமி, அம்மன் தேர். மதுரை கூடலழகர், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் திருமஞ்சனம். கோட்செங்கட்சோழ நாயனார் குருபூஜை.
மார்ச் 10 மாசி 27: அமாவாசை விரதம். துவாபர யுகாதி. திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைக்காவூர் தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம். திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
மார்ச் 11 மாசி 28: சந்திர தரிசனம், திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல், சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
மார்ச் 12 மாசி 29: குரங்கணி முத்துமாலையம்மன் பவனி, திருவாரூர் தியாகராஜர் பவனி, தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு, சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்,
மார்ச் 13 மாசி 30: சதுர்த்தி விரதம், மிலட்டூர் விநாயகர் பவனி, தேரெழுந்துார் ஞானசம்பந்தர் புறப்பாடு, ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி எழுந்தருளல்.
மார்ச் 14 பங்குனி 1: ஷடசீதி புண்ணிய காலம், காரடையான் நோன்பு. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.