sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மே 03, 2024 08:42 AM

Google News

ADDED : மே 03, 2024 08:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*தீபாராதனையின் போது கண்களை மூடி வழிபடலாமா...

கே.கேஷிகா, பல்லடம், திருப்பூர்.

கண்களைத் திறந்து கடவுளை தரிசித்தபடி வழிபடுங்கள். மனம், புத்தி தெளிவடையும்.

*வாத நோய்க்கு எந்த கோயிலுக்கு வேண்டிக் கொள்ளலாம்?

எஸ்.ரம்யா, சிதம்பரம், கடலுார்.

தினமும் மாலையில் விளக்கேற்றி குருவாயூரப்பனை வழிபடுங்கள்.

*திருமணஞ்சேரி கோயிலில் கொடுத்த பிரார்த்தனை மாலை தொலைந்து விட்டது. என்ன செய்யலாம்?

பி.லாவண்யா, கல்யாண்புரி, டில்லி.

திருமணஞ்சேரி கோயிலில் சுவாமி, அம்மனுக்கு பூமாலை சாத்தி மீண்டும் அர்ச்சனை செய்யுங்கள். அதை பிரார்த்தனை மாலையாக வைத்துக் கொள்ளுங்கள்.

*தெய்வீக மாநாடு நடத்துவது ஏன்?

பி.ஹரிணி, மடிக்கேரி, மைசூரு.

ஆன்மிகவாதிகளின் கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம்.

*கருவறைக்குள் பக்தர்கள் உழவாரப்பணி செய்யலாமா?

எம்.துஷ்யந்த், சின்னமனுார், தேனி.

அர்ச்சகர் மூலம் கருவறையை துாய்மைப்படுத்துங்கள்.

*குழந்தைகளுக்கு எத்தனை முத்து உள்ள கொலுசு அணிவிக்க வேண்டும்?

சி.ரித்திகா, கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி.

9, 12 என்ற எண்ணிக்கையில் முத்துக்கள் இருந்தால் கிரகதோஷம் விலகும்.

*எதிரியாகவும், துரோகியாகவும் சிலர் மாறி விடுகிறார்களே....

ஆர்.யாமினி, ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.

சிரித்த முகத்துடன் பழகினால் எதிரி என்பதே இல்லை. பொறாமை உடையவர்கள் தான் துரோகியாக மாறுவார்கள். அவர்களிடம் இருந்து கடவுள் நம்மைக் காப்பாற்றுவார்.

*ராஜதானி என்றால்...

ஜி.வைசாலி, பசுமலை, மதுரை.

'ராஜ' என்றால் மன்னர். 'தானி' என்றால் இடம். மன்னர் வசிக்கும் இடம் அல்லது தலைநகரம் என்பது இதன் பொருள்.

*அர்ச்சாவதாரம் என்றால் என்ன?

எல்.சித்தார்த், நாகர்கோவில், கன்னியாகுமரி.

'அர்ச்ச' என்றால் 'பூஜை'. கண்ணுக்குத் தெரியாத கடவுளை சிலை வடிவில் வழிபடுவது அர்ச்சாவதாரம்.






      Dinamalar
      Follow us