sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : மே 10, 2024 12:18 PM

Google News

ADDED : மே 10, 2024 12:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மே 10 சித்திரை 27: பலராம ஜெயந்தி. திரேதா யுகாதி. அட்சய திரிதியை. சிவகாசி விஸ்வநாதர் உற்ஸவம் ஆரம்பம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருத்தணி முருகப்பெருமான் கிளிவாகன சேவை.

மே 11 சித்திரை 28: சதுர்த்தி விரதம். காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளிக் கேடயத்தில் புறப்பாடு. சிவகாசி விஸ்வநாதர் பூத வாகனம். தேரெழுந்துார் ஞானசம்பந்தர், மிலாட்டூர் விநாயகப் பெருமான் புறப்பாடு. விறன்மீண்ட நாயனார் குருபூஜை.

மே 12 சித்திரை 29: லாவண்ய கவுரி விரதம். ஆதிசங்கரர் ஜெயந்தி. ஸ்ரீராமானுஜர் திருநட்சத்திரம். ஸ்ரீமணவாள மாமுனிகள் உடையவர் கூட புறப்பாடு. திருநெல்வேலி நெல்லையப்பருக்கும் காந்திமதியம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம்.

மே 13 சித்திரை 30: முகூர்த்த நாள். சஷ்டி விரதம். ஆழ்வார் திருநகரி, மாயவரம் கவுரிமாயூரநாதர், நயினார் கோவில், திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர், திருப்புகலுார் அக்னீஸ்வரர், திருவாதவூர், திருமறைநாதர் கோயில் உற்ஸவம் ஆரம்பம். கச்சியப்ப முனிவர் குருபூஜை. முதலியாண்டார் திருநட்சத்திரம்.

மே 14 வைகாசி 1: விஷ்ணுபதி புண்ணிய காலம். திருமோகூர் காளமேகப்பெருமாள் உற்ஸவம் ஆரம்பம். வீரபாண்டி கவுமாரியம்மன் பொங்கல் விழா. உத்தமர்கோவில் சிவபெருமான் சூரிய பிரபையில் பவனி.

மே 15 வைகாசி 2: காஞ்சி குமரக்கோட்டம் முருகப்பெருமான் பவனி. திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் உற்ஸவம் ஆரம்பம். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் தங்க புன்னைமர வாகனம்.

மே 16 வைகாசி 3: மதுரை கூடலழகர், பழநி முருகப்பெருமான் உற்ஸவம் ஆரம்பம். சிவகாசி விஸ்வநாதர் ரிஷப வாகனம், அம்பாள் தபசுக்காட்சி.






      Dinamalar
      Follow us