sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/திருச்செந்துாரின் கடலோரத்தில்....

திருச்செந்துாரின் கடலோரத்தில்....

திருச்செந்துாரின் கடலோரத்தில்....


ADDED : மே 17, 2024 08:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2024 08:25 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 22, 2024 - வைகாசி விசாகம்

* அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடு திருச்செந்துார்.

* முருகன் அவதரித்த நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். அது நிறைவேற்றியது இங்கு தான்.

* அறுபடை வீடுகளில் பெரிய கோயில் திருச்செந்துார்.

* அலைவாய், திருச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ ேஷத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவனமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகுபட்டினம் என பல பெயர்கள் உண்டு.

* திருச்செந்துாரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கியும், சண்முகர் தெற்கு நோக்கியும் உள்ளனர்.

* காவல் தெய்வமான வீரபாகுவின் பெயரால் இத்தலம் வீரவாகு பட்டினம் என்றும் அழைக்கப்படுகிறது. வீரபாகுவுக்கு பூஜை முடிந்த பின்னரே முருகனுக்கு பூஜை நடக்கும்.

* பாலசுப்பிரமணியருக்கு வெள்ளை நிற ஆடையும், சண்முகருக்கு பச்சை நிற ஆடையும் அணிவிக்கின்றனர்.

* மூலவருக்கு பின்புறம் சுரங்க அறையில் முருகன் வழிபட்ட பஞ்சலிங்கங்களை தரிசிக்கலாம். இந்த அறையை பாம்பறை என்பர்.

* கோயிலின் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இதன் முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

* சண்முகர், ஜெயந்தி நாதர், குமர விடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்ஸவர்கள் இங்குள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை 'மாப்பிள்ளை சுவாமி' என அழைப்பர்.

* ராஜகோபுரம் 17ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இதன் உயரம் 157 அடி.

* திருச்செந்துார் மீது அருணகிரி நாதர் 83 திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். இதை பாடுவோர் கந்தலோகத்தில் வாழும் புண்ணியம் பெறுவர்.

* பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் திருச்செந்துார் கோயில் உள்ளது.

* மூலவர் முருகனுக்கு தங்க அங்கி அணிவிக்கும் போது மற்ற தெய்வங்களுக்கும் தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது.

* 124 துாண்கள் கொண்ட சண்முக விலாசம் என்னும் மண்டபம் 120 அடி உயரம், 60 அடி அகலம் கொண்டது.

* திருச்செந்துாரில் மூலவர் முன்புள்ள இடம் மணியடி. இங்கு நின்று சுவாமியை தரிசிப்பது விசேஷம்.

* இங்குள்ள நாழிக்கிணற்றில் நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும். இதன் ஆழம் 24 அடி.

* திருச்செந்துார் கோயில் திருப்பணிக்காக தங்களின் வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள் மவுனசாமி, காசிநாதசுவாமி, ஆறுமுகசாமி. இவர்களின் சமாதி நாழிக்கிணற்றின் அருகில் உள்ளது.

* மன்னார் வளைகுடா கடலில் அலை வரிசையாக மோதும் விதத்தில் கோயில் இருக்கிறது. இதனால் இதை 'திருச்சீர் அலைவாய்' என அழைக்கின்றனர்.

* கோயிலுக்குச் செல்லும் முன் துாண்டுகை விநாயகரை வழிபட வேண்டும்.

* மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை, வேலால் பிளந்த இடம் மாப்பாடு. திருச்செந்துாரில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் உள்ளது. தற்போது இது 'மணப்பாடு' எனப்படுகிறது.

* திருச்செந்துாருக்கு நடுவில் உள்ளது சிவக்கொழுந்தீசுவரர் கோயில். இதற்கு ஆதிமுருகன் கோயில் என்றும் பெயருண்டு.

* தெய்வானை திருமணத்தன்று ராஜகோபுரக் கதவு திறக்கப்படும்.

* அதிகாலையில் நடக்கும் விஸ்வரூப தரிசனம் (நிர்மால்ய பூஜை) காண்பது சிறப்பு.

* ஆதிசங்கரர், குமரகுருபரர், பகழிக்கூத்தர், உக்கிரபாண்டியரின் மகன் போன்ற அருளாளர்கள் இங்கு அருள் பெற்றுள்ளனர்.

* 'ஆறுமுக நயினார்' என்றும் முருகனுக்கு பெயருண்டு. இப்பகுதியில் ஆறுமுக நயினார் என பெயரிடுவர்.

* வீரபாண்டிய கட்ட பொம்மனும், அவர் மனைவி ஜக்கம்மாவும் தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

* தவக்கோலத்தில் சுப்பிரமணியர் இருப்பதால் காரம், புளி பிரசாதத்தில் சேர்ப்பதில்லை. ஆனால் சண்முகரின் பிரசாதத்தில் உண்டு.

* முருகனுக்கு படைக்கப்படும் நைவேத்யம்: சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, பேரீச்சை, பொரி, தோசை, சுகியன், தேன்குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு.

* உச்சிக்கால பூஜைக்கு முன் இலையிட்டு சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர், தீர்த்தம் படைத்த பின்னரே மூலவரின் பூஜையை தொடங்குவர். இரவு பூஜையில் பால், சுக்கு, வெந்நீரை நைவேத்யம் செய்வர்.

* பிரகாரத் துாண்களில் கந்த சஷ்டி கவசம், உள்பிரகாரங்களில் தல வரலாற்று படங்கள் உள்ளன.

* திருச்செந்துாரில் உச்சிக்கால பூஜை முடிந்து மணி ஒலித்த பிறகே வீரபாண்டிய கட்டபொம்மன் மதிய உணவைச் சாப்பிடுவார்.

* 100 கிலோ எடை கொண்ட மணி ஒன்று ராஜகோபுரம் 9ம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.

* சூரனை சம்ஹாரம் செய்த முருகன் தாமரையால் சிவபெருமானைப் பூஜித்தார். அதை உணர்த்தும் வகையில் மூலவர் சிலையின் வலக்கையில் தாமரை உள்ளது.

* ஆவணி விழாவின் போது மும்மூர்த்தியான பிரம்மா, விஷ்ணு, சிவன் அம்சமாக முருகன் காட்சி தருகிறார்.

* உச்சிக்கால பூஜை முடிந்ததும் மேளதாளத்துடன் சென்று பால், அன்னத்தை கடலில் கரைப்பார்கள். இதை கங்கை பூஜை என்கின்றனர்.

* திருச்செந்துாரில் உள்ள தங்க ரதத்தில் அறுபடை வீட்டு முருகன் சிலைகள் அறுங்கோண வடிவத்தில் இடம் பெற்றுள்ளன.

* அழகும், இளமையும் கொண்ட திருச்செந்துார் முருகனின் பெருமைகளைக் கேட்டாலும், படித்தாலும் மனதில் நிம்மதி, செல்வ வளம் சேரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us