ADDED : மே 31, 2024 10:28 AM

* திலகவதியின் தம்பி சிவனடியாரான திருநாவுக்கரசர். சமண சமயத்தை பின்பற்றிய இவர் சிவபக்தராக மாறினார். இவரால் சிவபக்தனாக மாறிய பல்லவ மன்னர் மகேந்திர பல்லவன்.
* சிவனடியாரான சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயன்மார் சேரமான்பெருமாள்.
* மதுரையில் சமண சமயம் வேரூன்றிய காலத்தில் மீண்டும் சைவத்தை நிலைநாட்டியவர் மங்கையர்க்கரசியார்.
* திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம் திருப்பெருமண நல்லுார். தற்போது ஆச்சாள்புரம் எனப்படும் இத்தலம் கடலுார் மாவட்டத்தில் உள்ளது.
* திருவாசகத்தை எழுதியவர் மாணிக்கவாசகர். இவர் மதுரையில் அரிமர்த்தன பாண்டியரின் அவையில் தலைமை அமைச்சராக இருந்தார்.
* ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண். இவர் பாடியவை திருப்பாவை, நாச்சியார் திருமொழி.
* பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு' என மதுரை கூடலழகர் மீது திருப்பல்லாண்டு பாடியவர் பெரியாழ்வார்.
* 'அப்பா! நான் வேண்டுவன கேட்டருள் புரிய வேண்டும்' என வேண்டிய அருளாளர் வள்ளலார்.