ADDED : ஜூன் 21, 2024 02:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வழிபாடு
உருவ வழிபாடு - சிந்தனை ஒருமுகப்படும்; ஆன்மிக ஆற்றல் மேம்படும்.
துளசி - கிருமி நாசினி; நோய் எதிர்ப்பு சக்தி கூடும். ஜலதோஷம், சளி அகலும்.
தோப்புக்கரணம் - கால், இடுப்பு, முதுகெலும்பு பலம் பெறும். மன அழுத்தம் நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்த ஓட்டம் சீராகும். சுறுசுறுப்பு கூடும்.
திருநீறு - மூளையில் இருக்கும் மந்தநீரை உறிஞ்சும். தலைவலி மறையும்.
குங்குமம் - புத்தி கூர்மை பெறும். முகத்தில் ரத்த ஓட்டம் சீர்படும்.
மஞ்சள் நீராட்டு - கிருமி நாசினி; உடல் பலம் பெறும். உறவு பலப்படும்.
மணியோசை - வலதுபக்கம், இடதுபக்கம் மூளையை சமமாக செயல்பட வைக்கும்.
மருதாணி - உடம்பு குளிர்ச்சி பெறும். மனம் அமைதி பெறும்.