
ஜூன் 28 ஆனி 14: சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், திருநெல்வேலி நெல்லையப்பர், காந்தியமதியம்மன் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம்.
ஜூன் 29 ஆனி 15: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி, திருச்சேறை சாரநதார், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோயிலில் திருமஞ்சனம். திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல், அகோபிலமடம் 23 வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம், ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை.
ஜூன் 30 ஆனி 16: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயில் குளக்கரை ஆஞ்சநேயர் திருமஞ்சனம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிஷேகம்.
ஜூலை 1 ஆனி 17: திருப்போரூர் முருகப்பெருமான் பால் அபிஷேகம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.
ஜூலை 2 ஆனி 18: கூர்ம ஜெயந்தி. ஏகாதசி, கார்த்திகை விரதம். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அலங்கார திருமஞ்சனம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், சுவாமிமலை முருகப்பெருமான் தங்கப்பூமாலை சூடியருளல்.
ஜூலை 3 ஆனி 19: முகூர்த்த நாள். பிரதோஷம். சிதம்பரம், ஆவுடையார் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
ஜூலை 4 ஆனி 20: மாத சிவராத்திரி. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, சுவாமி விவேகானந்தர் நினைவுநாள்.