sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூலை 02, 2024 01:06 PM

Google News

ADDED : ஜூலை 02, 2024 01:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜி.பானு, திர்லோக்புரம், டில்லி.

*தர்மத்தை பின்பற்றும் வயது...

விபரம் தெரிந்த நாளில் இருந்தே தர்மத்தை பின்பற்றலாம். உ.ம். வீட்டில் விளக்கேற்றுதல், பெரியோரை வணங்குதல், பிறருக்கு உதவுதல்.

வி.அட்சயா, ராமநாதபுரம், கோயம்புத்துார்.

*சந்தியா தாண்டவம் என்றால்...

பிரதோஷத்தின் போது நந்தியின் கொம்புக்கு இடையே சிவன் ஆடும் நடனம்.

பி.ஸ்வேதா, திருநகர், மதுரை.

*முக்கண்ணன் என சிவனைக் குறிப்பிடும் முதல் நுால் எது?

சங்கநுாலான கலித்தொகை. அதில் 'பிறைநுதல் முக்கண்ணன் உருவே போல் முரண்மிகு குரல்' என்னும் வரி உள்ளது.

கே.ஸ்ரீலட்சுமி, தெரிசனங்கோப்பு, கன்னியாகுமரி.

*சிறிய கோயில்களில் கிரிவலம் சுற்றலாமா?

எந்த மலைக்கோயிலை சுற்றி வந்தாலும் பலன் ஒன்றுதான்.

பி.கவுதம், திருத்தணி, திருவள்ளூர்.

*தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்; மீண்டும் தர்மமே வெல்லும் எனச் சொன்னவர்...

மகாகவி பாரதியார். இவர் பாடிய பாஞ்சாலி சபதத்தில் பீமனிடம் அர்ஜூனன் சொல்வதாக இதைக் குறிப்பிட்டுள்ளார்.

வி.கிருஷ்ணா, நெய்வேலி, கடலுார்.

*கோயிலுக்கு வந்த பக்தர்கள் தரும் பழம், பூக்களை வாங்கலாமா?

பக்தர்கள் தரும் பழம், பூக்கள் கடவுளின் பிரசாதமே. அதனால் வாங்கலாம்.

வெ.சாத்விகா, பழநி, திண்டுக்கல்.

*தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் தலம் எது?

திருவாரூர் தியாகராஜர் கோயில். அதே போல் எட்டுகால பூஜை நடக்கும் கோயில்களில் தினமும் பிரதோஷ பூஜை நடக்கும். உ.ம். மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை

பி.விநாயக்ராம், மாகடி, பெங்களூரு.

*வரத ஹஸ்தம், அபய ஹஸ்தம் என்கிறார்களே...

ஹஸ்தம் என்றால் கை. வரத ஹஸ்தம் என்றால் வரம் தரும் கை. அபய ஹஸ்தம் என்றால் பயம் போக்கும் கை.

கே.சாய்சரண், பணகுடி, திருநெல்வேலி.

*பிறந்த நட்சத்திரத்தன்று திருமணத்தை நடத்தலாமா?

பிறந்த நட்சத்திரம், பிறந்த நட்சத்திரத்தையும் கணக்கில் கொண்டு அதில் இருந்து 10வது நட்சத்திரம், 19வது நட்சத்திரங்களில் திருமணம் நடத்தக் கூடாது.






      Dinamalar
      Follow us