ADDED : ஆக 02, 2010 12:32 PM

அரசமரத்தின் அடியில் குளக்கரையிலோ, ஆற்றங்கரையிலோ விநாயகர் அமர்ந்திருப்பார். ஒருமுகம் முதல் ஆறுமுகங்கள் வரை மாறுபட்ட வடிவத்தில் கோயில்களில் அருள்பாலிக்கிறார். எல்லாக் கோயில்களிலும் விநாயகருக்கு ஆனைமுகத்தோடு இருக்க, திருச்செங்காட்டங்குடியில் மட்டும் நரமுக கணபதி மனிதமுகத்தோடு வீற்றிருக்கிறார்.
மகாராஷ்டிராவில் துவிமுக கணபதி இருமுகங்களோடு இருக்கிறார். பச்சை வண்ணத்துடன் இருக்கும் இவர் தந்தம், பாசம், அங்குசம், ரத்தினபாத்திரம் ஏந்தியிருப்பார்.
திரிமுக கணபதி சிவந்த நிறம் கொண்டவர். பாசம், அங்குசம், அமுதகலசம், அட்சமாலை ஏந்தியிருப்பார். பொற்றாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் இவர் மூன்று முகங்களைப் பெற்றிருப்பார். ஜப்பான் மக்கள் இவரை வழிபடுகின்றனர்.
நான்கு முகங்களோடு இருக்கும் விநாயகரே சதுர்முக கணபதி. இவரை சீனர்கள் வழிபடுகின்றனர்.
ஐந்து முகங்களைக் கொண்ட விநாயகரை ஹேரம்ப கணபதி என்று அழைப்பர். மத்தியபிரதேசத்தில் நர்மதா நதிக்கரையோரம் அமைந் துள்ள அமலேஸ்வரம் என்னும் ஊரில் கோயில் உள்ளது.திருவானைக்காவலிலும்,புதுக் கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோயிலிலும் பஞ்சமுகவிநாயகருக்கு சன்னதி உள்ளது. நேபாளத்தில் பஞ்சமுக கணபதி வழிபாடு அதிகம். ஆறுமுகங்களைக் கொண்ட பிள்ளையாருக்கு சண்முக கணபதி என்று பெயர். இவருக்கு திருக்கழுக்குன்றத்தில் கோயில் உள்ளது.
கஷ்டம் கஷ்டம் என்கிறீர்களா? கடலில் விழ தயாராகுங்க!
விதுரர்..மகாபாரத திருதராஷ்டிரனின் தம்பியான இவர் மிகவும் நல்லவர். 'மகாத்மா' என புகழப்படுபவர். யாருடைய மனமும் புண்படாமல் பேசும் பொறுமைசாலி. இப்படிப்பட்ட பொறுமைசாலிக்கு இரண்டு பேர் மீது மட்டும் கோபம் வருகிறது. அவர்கள் கழுத்தில் பெரிய கல்லைக் கட்டி கடலில் தள்ள வேண்டும் என்கிறார். அவர்கள் யார் தெரியுமா? தனது 'விதுரநீதி' என்ற நூலிலே அதுபற்றி சொல்கிறார்.
பணம் படைத்தவர்கள் ஏழைகளுக்கு தானம் செய்யாமல் இருந்தால் அவர்களையும், வறுமையான நிலை வரும் போது, அந்த வறுமையையே பெரிதுபடுத்திக் கொண்டு 'கஷ்டம்... கஷ்டம்' என்று புலம்புபவர்களையும் குறிப்பிடுகிறார். இவர்களில், இரண்டாம் பிரிவினர் தங்களுக்கு கஷ்டம் வரும் நேரத்தில் கஷ்டத்தைப் பெரிதுபடுத்தாமல், அதைத் தீர்க்க வேண்டுமென இறைவனிடம் முறையிட்டு அவன் பெயரை ஜபித்துவிட்டு, தங்கள் பணியைத் தொடரச்சொல்கிறார். இனியும் கஷ்டம், கஷ்டம் என புலம்பாதீர்கள். பணமுள்ளவர்கள் பிறருக்கு <உதவும் பக்குவத்தைப் பெறுங்கள்.