sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

விநாயகருக்கு உகந்த கிழமை

/

விநாயகருக்கு உகந்த கிழமை

விநாயகருக்கு உகந்த கிழமை

விநாயகருக்கு உகந்த கிழமை


ADDED : செப் 10, 2010 03:02 PM

Google News

ADDED : செப் 10, 2010 03:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவிலேயே விநாயகர் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுவது மகாராஷ்டிராவில் தான். அவர்கள் கணேஷ் சதுர்த்தி என்று சிறப்பான அளவில் மிகப் பிரம்மாண்டமாக இவ்விழாவைக் கொண்டாடுவர். பத்து நாட்களுக்கும் மேலாக பக்திப்பரவசத்தில் இம்மாநிலமே மிதக்கும்.  விநாயகர் இம்மக்களுக்கு குலதெய்வமாகவும், வெற்றிதரும் கடவுளாகவும் போற்றப்படுகிறார்.  இங்கு திரும்பிய இடமெல்லாம் இவருக்கான கோயிலும் வழிபாடும் நிகழ்வதைக் காண முடியும். 'மங்கல்வார்' என்னும் செவ்வாய்க்கிழமை உகந்தநாளாக எண்ணி ஆலய தரிசனம் செய்ய திரளாக விநாயகர் கோயிலுக்குச் செல்வார்கள். கொழுக்கட்டை, மோதகம் போன்ற பாரம்பரிய பிரசாத வகைகளோடு, வடநாட்டுக்கே உரிய பர்பி, லட்டு, பால்பேடா போன்றவற்றையும் நிவேதனமாகப் படைப்பர்.  கடைசிநாளில் 'கணபதி பப்பா மோரியா' என்னும் கோஷம் எழுப்பி வழியனுப்புவது உள்ளத்தை உருகச் செய்வதாகும். ''மங்களம் தரும் விநாயகப்பெருமானே! இன்று சென்று வரும் ஆண்டில் திரும்பி வருக'' என்பதே இதன் பொருள்.

பிள்ளை மனம் கொண்டவர்  வெள்ளை குணம் உடையவர்

விநாயகருக்குப் பலவிதமான பெயர்கள் வழங்கப்படுகின்றன. அப்பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் உண்டு.

கணபதி     பூதகணங்களுக்கெல்லாம் தலைவன்

விக்னேஸ்வரன்     தடை அனைத்தையும் போக்குபவர்

லம்போதரன்     தொந்தி உடையவர்

ஐங்கரன்     ஐந்து திருக்கரங்களைக் கொண்டவர்

வக்ரதுண்டன்     வளைந்த துதிக்கை பெற்றவர்

பிள்ளையார்            குழந்தைபோல் வெள்ளைமனம் கொண்டவர்

ஒற்றைக்கொம்பன்     ஒரு கொம்பு உடையவர்

ஹேரம்பர்     திக்கற்றவர்களுக்கு உதவுபவர்

விநாயகர்     மேலான தலைவர்

தந்திமுகன்     தந்தத்தை பெற்றவர்






      Dinamalar
      Follow us