தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/வரம் தருவாய் வடிவேலா...

வரம் தருவாய் வடிவேலா...

வரம் தருவாய் வடிவேலா...


ADDED : ஜன 29, 2018 09:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2018 09:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தைப்பூசத்தில் முருகப்பெருமானை இவ்வாறு பிரார்த்தனை செய்யலாம்.

* உலகம் அனைத்தையும் ஆள்பவனே! நல்லவர்க்கு அருள்பவனே! வடிவேலனே! குற்றம் பொறுக்கும் குணக்கடலே! சிவகுருநாதனே! வேண்டும் வரம் தருபவனே! எட்டுத்திக்கையும் அருளாட்சி செய்பவனே! சரவணபவனே! என்னைக் காத்தருள் வாயாக.

* கயிலைநாதர்பெற்ற தவக்கொழுந்தே! தேன் சிந்தும் கடப்பமாலையை விரும்பி அணிபவனே! தணிகாசல மூர்த்தியே! கார்த்திகேயனே! சூரபத்மனை ஆட்கொண்ட வீரனே! தேவசேனாபதியே! வள்ளிக்கு வாய்த்தவனே! என் பிழைகளைப் பொறுத்தருள்வாயாக.

* செவ்வேள் பரமனே! விநாயகருக்கு பின் வந்தவனே! சிவசுப்பிரமணியனே! ஒளிமிகுந்த தோள்களைக் கொண்டவனே! பன்னிருகை வேலவனே! வெற்றி வேலாயுத மூர்த்தியே!

* திருமாலின் மருமகனே! குழந்தைக் கடவுளே! எனக்கு ஆரோக்கியத்தை தந்தருள்வாயாக.

* மயில்வாகனனே! சேவற்கொடியோனே! சிவசக்தி மைந்தனே! நம்பியவரைக் காப்பவனே!

* காங்கேயனே! அறுபடை வீடுகளில் அமர்ந்து அருளாட்சி புரிபவனே! தெய்வானை மணவாளனே! நவக்கிரகங்களால் உண்டாகும் தோஷங்களைப் போக்கி இன்பவாழ்வு அருள்வாயாக.

* சஷ்டிநாதனே! மண்ணிலும், மரத்திலும், மலையிலும், நெருப்பிலும், நீரிலும், வாகனத்தில் செல்லும்போதும், பாதாள குகையிலும், வேறெந்த இடத்திலும் நான் இருக்கும்போது விரும்பி வந்து காத்தருளவேண்டும். ஒருகணமும் உன்னை மறவாத பாக்கியத்தைத் தந்தருள்வாயாக.

* இனியமொழிபேசும்தெய்வா னையின் மன்னவனே! வள்ளிநாயகியின் கரம் பிடித்தவனே! கருணை சிந்தும் விழிகளைக் கொண்டவனே! உன்வெற்றிக் கொடியில் இருக்கும் சேவலைக் கூவச் செய்து என் வாழ்வில் நல்ல விடியலை உண்டாக்கு வாயாக.

* தாமரைத் திருவடிகளைக் கொண்டவனே! வேதம் புகழும் சக்தியுமை பாலனே! குறிஞ்சியின் முதல்வனே! துன்பம் எல்லாம் போக்கி அன்பர் வாழ்வில் ஆறுதலைத் தந்தருளும் ஆறுமுகப் பெருமானே! பிரணவத்திற்குப் பொருள் உரைத்த சிவகுருநாதனே! நீயே எனக்கு ஞானத்தை வழங்கி அருளவேண்டும்.

* வேதத்தின் உட்பொருளே! மனதைக் கவரும் பேரழகனே! தெய்வசிகாமணியே! குன்றுதோறும் குடியிருக்கும் குமரேசனே! அமுதம் போல இனிமை கொண்டவனே! சரவணப் பொய்கையில் உதித்தவனே! அவ்வைக்கு அருள் செய்த சிவபாலனே! திருச்செந்தில் ஆண்டவனே! என் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பாயாக.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us