தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/உதடு ஒட்டாமல் பாட முடியுமா?

உதடு ஒட்டாமல் பாட முடியுமா?

உதடு ஒட்டாமல் பாட முடியுமா?


ADDED : ஜன 15, 2011 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2011 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரம்பலூர் துறைமங்கலத்தில் வாழ்ந்தவர் சிவப்பிரகாசர். இவர் திருச்செந்தூர் முருகப்பெருமானைப் பற்றி, 'நீரோட்டக யமக அந்தாதி' என்னும் நூலை இயற்றினார். இந்த நூலிலுள்ள பாடல்கள் அனைத்தும் மேல் உதடும் கீழ் உதடும் ஒட்டாத முறையிலான எழுத்துக்களைக் கொண்டு அமைத்துப் பாடும் பாடலாகும். 'பிரபுலிங்க லீலை' என்னும் சைவ நூலையும் இவர் எழுதினார். இந்நூல் கன்னட மொழியில் எழுதப்பட்ட ஒரு நூலின் மொழி பெயர்ப்பாகும். சிவனுக்கு அல்லமதேவன் என்று பெயர் உண்டு. இந்த இறைவனை 'பிரபு' என்றும் அழைப்பர். இந்த பிரபுவின் லீலைகளை விளக்கும் நூல் என்பதால் 'பிரபுலிங்க லீலை' என்று பெயர் சூட்டப்பட்டது. இவர் சோணசைல மாலை, திருவெங்கைக் கோவை, திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கை உலா, நால்வர் நான்மணி மாலை, திருக்கூவப்புராணம் என்ற நூல்களையும் இயற்றியுள்ளார். இவரைக் 'கற்பனைக் களஞ்சியம்', 'கற்பனை ஊற்று' என்று பாராட்டுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us