ADDED : ஜன 15, 2011 12:54 AM

வாசகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாரியார்.
* வடஇந்தியாவில் முருகனுக்கு ÷க்ஷத்திரம் உண்டா? சே.தமிழரசி, தென்கடப்பாந்தாங்கல்
டில்லி உத்தர சுவாமிமலை, மும்பை செம்பூர் முருகன் கோயில்கள் பிரசித்தமானவை."கார்த்திக்ஜி' என்று ஆறுமுக கடவுளையும், "தண்டபாணி' என்று தவறுகளை தண்டிக்கும் தெய்வமாகவும் முருகனை வழிபட்டு வருவது அங்கு மரபாக <உள்ளது. தற்போது, அங்கு வசிக்கும் தமிழர்கள் ஆங்காங்கே முருகன் கோயில்களை உருவாக்கியுள்ளனர்.
* ஐந்து கூட்டு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவதால் என்ன பயன்? க.சந்திரா, கொட்டாம்பட்டி
ஆதாரம் இல்லாமல் சிலர் சில விஷயங்களைப் பரப்பி வருகிறார்கள். சாஸ்திரங்களில் கூறப்பட்டப்படி நெய் தீபம் உத்தமமானது. நல்லெண்ணெய் தீபம் மத்யமானது. இலுப்பை எண்ணெய் என்பது மூன்றாம் தரம். இதுதவிர கூட்டு எண்ணெய் விளக்கு ஏற்றுவது போன்ற விஷயங்களை யாம் அறியோம்.
* பூஜை செய்யும் பொழுது ஆண்கள் விளக்கேற்றலாம். குளிரவைக்கக்கூடாது என்கிறார்களே! விளக்கம் கூறுங்கள். எம்.கே.கோவிந்தராஜ், தேனி
சில விஷயங்கள் ஆண்டாண்டு காலமாக முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டு நம்முடைய பழக்க வழக்கங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. வழக்கத்தில் உள்ள சில விஷயங்களுக்கு சாஸ்திரங்களில் கூட பதில் கிடைக்காது. இருந்தாலும் அதனை மாற்றி அமைக்க நமக்கு அதிகாரம் கிடையாது. ஆன்மிக விஷயங்களில் சில பிரச்னைகள் ஏற்பட்டு அவை பெரிதாக்கப்பட்டு உச்சநீதிமன்றம் வரை கூட சென்று நீதிபதிகளால் தீர்ப்பு வழங்கப்படும் பொழுது எடுத்தாளப்படும் சட்ட ரீதியான ஒரு சொல் Customs and Usage (பழக்க வழக்கம்) என்பதாகும். இதனடிப்படையிலேயே கோயில்களிலும் சரி, வீடுகளிலும் சரி.. சில விஷயங்களை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று இருந்தால் கேள்வி கேட்காமல் அதை அப்படியே செய்வது நல்லது. தீபங்களை யார் வேண்டுமானாலும் ஏற்றலாம். பெண்களின் கைகளினால் குளிரச் செய்வது குடும்பத்திற்கு நல்லது என்று இருப்பதனால் அதனையே நாமும் பின்பற்றுவோமே. கோ பூஜையை பசுமாட்டின் பின்புறம் தான் செய்ய வேண்டும் என்பது வழக்கத்தில் இருந்து வருகிற ஒன்று. ஏனெனில் அங்கு தான் மஹாலட்சுமி இருப்பதாக ஐதீகம். இது சம்பந்தமாக காஞ்சி மகாசுவாமிகளிடம் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு மேற்கூறிய நிலையிலேயே பதில் கூறி சில சம்பிரதாயங்களை அப்படியே செய்தால் "satisfaction''' என்றும், மாற்றிச் செய்வது Dissatisfaction என்றும் கூறி அருளியது இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
* திருத்தலங்களுக்கு செல்லும் பொழுது சுவாமி தரிசனத்திற்கு முன் தர்மம் செய்வதா அல்லது தரிசித்து வந்த பின் தர்மம் செய்வதா? பி.சாவித்திரி, கம்பம்
இறைவழிபாட்டிற்குப் பிறகு, தான தர்மம் செய்வது தான் சிறந்தது.
* "தத்வமசி' என்றால் என்ன? எஸ்.சேகரன், சென்னை
பரம்பொருள் என்பதை அவன், அவள், அது எனும் முப்பாலிலும் குறிப்பது தமிழர்களின் மரபு. அப்பரம்பொருளாக நீ இருக்கிறாய் என்பதே இதன் பொருள். தத்=அந்த பரம் பொருளாக, த்வம்=நீ, அசி=இருக்கிறாய். " எல்லாவற்றிற்கும் மேலான பரம்பொருளாக இருக்கும் இறைவனே! உன்னை வணங்குகிறேன்' என்பது உட்கருத்து.
