தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/திருவாசகம் - மாணிக்க வாசகர் பாடுகிறார் - பாடல் - 156

திருவாசகம் - மாணிக்க வாசகர் பாடுகிறார் - பாடல் - 156

திருவாசகம் - மாணிக்க வாசகர் பாடுகிறார் - பாடல் - 156


ADDED : ஜன 15, 2011 12:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2011 12:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்

சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்

மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை

நாயான நம்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்

தாயான தத்துவனைத் தானே உலகு ஏழும்

ஆயானை ஆள்வானைப் பாடுதும்காண் அம்மானாய்!

பொருள்: தன்னை மனதில் வைத்துப் போற்றுபவர்களுக்கு உள்ளத்தை தேடி வரும் சிவபெருமான், அவர்களுக்கு சேவகனாய் இருப்பான். நினைக்காதவரின் உள்ளத்தை விட்டு வெகுதொலைவில் இருப்பான். திருப்பெருந்துறையில் விரும்பி உறையும் அந்தப் பெருமான் ஞானகுருவாகவும், இடப்பாகத்தில் உமையவளை ஏற்றும் இருக்கிறான். நாய் போன்ற நம்மையும் ஆட்கொண்டு அருள்புரியும் தாயாகவும், தனித்தத்துவமாகவும், ஏழுலகங்களின் தலைவனாகவும் இருந்து ஆள்பவனாக இருக்கிறான். அப்பெருமானின் புகழைப் பாடி அம்மானை ஆடுவோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us