ADDED : ஆக 11, 2023 03:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழ்கண்டவற்றை 21 அமாவாசையில் தொடர்ந்து செய்தால் முன்னோர் ஆசி முழுமையாக கிடைக்கும். நினைத்தது நடக்கும்.
* விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பாலை குழந்தைகளுக்கு கொடுத்து வர கல்வியில் சிறப்பார்கள்.
* எறும்புகளுக்கு அரிசி, தானியம் கொடுத்து வர குடும்ப ஒற்றுமை பலப்படும்.
* காகத்திற்கு உணவிட்டால் தோல் நோய் நீங்கும்.
* குரங்குகளுக்கு கடலை, பிஸ்கட், பொரி, பழங்கள் கொடுக்க அலைபாயும் மனம் தெளிவடையும்.
* முருகன் கோயிலில் செய்யும் அன்னதானம் முன்பகையை முறியடிக்கும்
* சித்தர்களின் சன்னதிகளில் சாம்பிராணி இட்டு வர தடைபட்ட செயல் நிறைவேறும்.
* பசுமாட்டிற்கு கீரை கொடுக்க தீவினை நீங்கும்.
* இரவில் சாப்பாட்டிற்கு பிறகு தாம்பூலம் இட்டுக் கொள்பவர்கள் 11 பேருக்கு தாம்பூலம் கொடுக்க குடும்பச்சுமை குறையும்.

