
ஆகஸ்ட் 11 ஆடி 26: சேலம் செவ்வாய் பேட்டை மாரியம்மன் தேர். திருத்தணி முருகப்பெருமான் தெப்பம். அழகர்கோவில் சுந்தர்ராஜப்பெருமாள் தேவியர்களுடன் விஸ்வரூப தரிசனம். காவல் தெய்வமான பதினெட்டாம் படி கருப்பண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்.
ஆகஸ்ட் 12 ஆடி 27: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயிலில் வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். கூற்றுவ நாயனார் குருபூஜை.
ஆகஸ்ட் 13 ஆடி 28: பிரதோஷம், திருவாதிரை விரதம். சகல சிவன் கோயில்களிலும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு. திருப்பதி ஏழுமலையான் சமஸ்தான மண்டபத்தில் எழுந்தருளல். ஸ்ரீ பெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
ஆகஸ்ட் 14 ஆடி 29: சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்.
ஆகஸ்ட் 15 ஆடி 30: அஹோபில மடம் 36வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம். சோளசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் பவித்ர உற்ஸவம் ஆரம்பம். சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை சூடி அருளல்.
ஆகஸ்ட் 16 ஆடி 31: ஆடி அமாவாசை சகல கோயில்களிலும் சிறப்பு வழிபாடு. புனித நீராடல், தீர்த்த கரைகளில் முன்னோருக்கு திதி கொடுத்து வழிபடுதல்
ஆகஸ்ட் 1 ஆடி 32: விஷ்ணுபதி புண்ணிய காலம். ஸ்ரீரங்கம் நம்பெருமான், திருவள்ளூர் வீரராகவர், சோளசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் இத்தலங்களில் புறப்பாடு.

