ADDED : டிச 03, 2010 02:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இமயமலையில் கங்கோத்ரி என்னுமிடத்தில் கங்கைநதி உற்பத்தியாகிறது. அங்குள்ள 'கோமுக்' குகையில் கங்கையம்மனுக்கு கோயில் உள்ளது. இவள் வானுலகில் இருந்து பகீரதன் என்பவன் செய்த தவத்தின் பலனாக பூவுலகம் வந்ததாக ஐதீகம். கங்கையை சிவபெருமான் தலையில் தாங்கியதால் அவருக்கு 'கங்காதரன்' என்ற பெயர் உண்டானது. கங்கோத்ரியில் பனிமூடிக் கொள்வதால் நவம்பர் முதல் மேவரை இந்த அம்மனைத் தரிசிக்க முடியாது. அப்போது கருவறையில் அம்மனுக்கு அணையாதீபம் ஒன்றினை ஏற்றிவைத்து விடுவர். இந்த தீபம் தொடர்ந்து மே மாதம் வரை எரிந்து கொண்டிருக்கும் என்பது ஆச்சரியமான விஷயம்.