sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே!

/

துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே!

துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே!

துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே!


ADDED : ஆக 13, 2010 10:38 AM

Google News

ADDED : ஆக 13, 2010 10:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உற்சாகப்படுத்துகிறார் சின்மயானந்தர்

* ஒரு மனிதனின் கவுரவம் என்பது, புத்தியை அடிப்படையாகக் கொண்டு உண்மையாக வாழ்வதில் தான் இருக்கிறது. புறவுலகச் சவால்களால் அலைக்கழிக்கப்பட்டு மனிதர்கள் தங்கள் புத்தியை இழந்து விடுகிறார்கள்.

* உலகத்தில் அனுபவம் இல்லாவிட்டால் வாழ்க்கையில் வெறுப்பு உண்டாகும். உலகத்தை அனுபவியுங்கள். ஆனால், உலகத்தில் நீங்கள் சிக்கிக் கொண்டுவிடாமல் இருக்க பாதுகாப்பான அனுபவம் தேவை.

* தர்மசாஸ்திரங்கள் நம் இன்பத்தையும், சுதந்திரத்தையும் தடுப்பதில்லை. மாறாக சுகமான அனுபவங்களுக்கு நாம் அடிமையாகி விடக்கூடாது என்றே அறிவுறுத்துகின்றன.

* வாழ்க்கை இருண்டு விட்டதே என்று கவலை கொள்வதால் பயனில்லை. துணிச்சலுடன் முன்னேறுங்கள். மனதிலுள்ள துயரங்கள் விலகி விடும். நல்லெண்ணங்களையும், முயற்சியையும் கைவிடாதீர்கள். தீமைகள் யாவும் நம்மை விட்டு விலகிவிடும்.

* கோபம், பேராசை, பொறாமை போன்ற தீயகுணங்கள் நம்மிடம் உள்ள ஆற்றலை அழிக்கும் தன்மை கொண்டவை. ஆற்றலை இழந்தால் நம் முயற்சிகளில் முழுமையாக ஈடுபட முடியாமல் போய்விடும்.

* உயர்ந்த லட்சியங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ளுங்கள். அப்போது அளவற்ற பேராற்றல் உங்களிடத்தில் உருவாகி வருவதை உணரமுடியும்.

* ஆறானது தண்ணீருடன் சம்பந்தப்பட்டிருப்பதுபோல, மனம் எண்ணங்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. தண்ணீரின் ஓட்டத்தால் ஆறு உருவாவதைப் போல, எண்ணங்களின் ஓட்டமே மனமாக வெளிப்படுகிறது.

* பகவத்கீதையை ஒருமுறை உன்னுள் அனுமதித்தால் போதும். நிறைய நற்பலன்கள் உண்டாகும். கீதை காட்டும் பண்புகளை வாழ்வில் ஏற்றுக் கொண்டால் மனிதவாழ்வில் ஒளி உண்டாகும்.

* மனதில் படிந்துவிட்ட தீய எண்ணங்களையும், ஆசைகளையும் அகற்றி இறைத்தன்மையை மலரச் செய்வது தான் ஆன்மிகத்தின் முடிவான குறிக்கோள்.

* நம் மனதை புத்தியால் ஆட்சி செய்ய வேண்டும். புத்திக்கு மனம் தோழியைப் போலத் துணைபுரிய வேண்டும். மனம் மற்றும் புத்தியின் கூட்டுறவால் மனிதவாழ்வு முழுவளர்ச்சி பெறும்.

* தன் உண்மையான இயல்பை மனிதன் அறியவேண்டும். தனக்குரிய பூரண வளர்ச்சியை அவன் அடைவதற்குத் துணை செய்யக்கூடிய சாதனம் தான் தியானமாகும்.

* நமக்கு சாஸ்திரநூல்களை வகுத்துத் தந்த பெரியோர்கள், தமக்கென்று எந்த இன்பத்தையும் நாடியதில்லை. அதனால் அவர்களுக்கு எந்தவிதமான துன்ப அனுபவமும் ஏற்பட்டதில்லை.

* சாந்தம் என்பது ஒரு மனநிலை அவ்வளவே. ஒரு ஆசையை நிறைவேற்றி வைத்தால் மனம் அடுத்த ஆசையில் காலூன்றுகிறது. அந்தக்குறையை நிரப்பினால் மற்றொரு ஆசை மனதில் உதிக்கிறது. பூரண அமைதியில் தான் மெய்யான இன்பம் இருக்கிறது என்பதை நாம் உணர்வதில்லை.






      Dinamalar
      Follow us