sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

அத்தி வரதர் ஸ்தோத்திரம் (1)

/

அத்தி வரதர் ஸ்தோத்திரம் (1)

அத்தி வரதர் ஸ்தோத்திரம் (1)

அத்தி வரதர் ஸ்தோத்திரம் (1)


ADDED : அக் 18, 2019 02:44 PM

Google News

ADDED : அக் 18, 2019 02:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மர்த்யாவபாதித துரந்த நிவாரணாயா

ஸத்வாக்ய பாலக ஸமஸ்த ஜனாக்ர பந்தோ!

காஞ்சீபுரக்ய நகரே மணி தீர்க்கிகாந்த

ரெளதும்பரஸ்த வரதம் சரணம் ப்ரபத்யே!!

மனிதர்களின் இன்னல்களை போக்குவேன் என உறுதிமொழி எடுத்தவனே! உலக மக்களின் சிறந்த உறவே! காஞ்சி என்னும் புனித நகரில் வாழ்பவனே! அழகிய குளத்தில் உள்ள அத்தி வரதனே! உன்னை சரணடைகின்றோம்.

தாருசில்ப மயம் தேவம் சாரு சாரு தர்சன செளபகம்!

ஸர்ப்ப ராஜாங்க பர்யங்க சாயினம் வரதம் நும:!!

யாகத்திற்கு பயன்படும் மரத்தில் வடிவமைத்த உன் அழகான உருவத்தை பார்க்க எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்? பாம்பின் மடியில் படுத்துக் கொண்டு உலகை காக்கும் வரதனே! உன்னை வணங்குகிறோம்.

சதுர்பாஹூ தரம் ரூபம் சதுராஸ்ய ப்ரதிஷ்டிதம்!

சதுர் விதார்த்த சம்பத்தி சாதுர்யம் தீயதாம் ப்ரபோ!!

நான்கு கைகளை உடைய உனது வடிவம் நான்முகனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நான்கு வித பயன்களான அறம், பொருள், இன்பம், வீட்டை அளிப்பவனே! எங்களுக்கு அவற்றை அடையும் பேற்றை அளிப்பாயாக!

திவ்யபட்ட பரிதாங்கம் லம்பமாலாபி சோபிதம்!

நாநா ரத்ன விபூஷாங்கம் பக்தோதம்ஸ சமர்ப்பிதம்!!

பட்டு, பீதாம்பரம் அணிந்தவனே! நீளமான வனமாலையால் அழகு சேர்ப்பவனே! உத்தம பக்தர்கள் அளித்த ரத்தின அணிகளால் அலங்கரிக்கப்பட்டவன் நீயல்லவா!

சத்வாரி தசவர்ஷாணி தீர்க்கி ஜலவாசினம்!

தீயதாம் பக்தேஷூ பலம் சாலம் தாபஸ்வ்ருத்தயே!!

நாற்பது வருடங்களாக வசந்தப் பொய்கையில் இருந்து செய்த தவம் போதும்! அந்த தவப்பலனை பக்தர்களுக்கு இன்று அளிப்பாயாக.

ஜலமக்னேன சம்சுத்தம் அக்ன்யா ஷ்லேஷித சோபிதம்!

ஹந்த தேவாத்ம சுத்யர்த்தம் நிமஸ்தே ஸத்வ ரூபிணம்!!

குளத்தில் மூழ்கி இருப்பதால் துாய்மையானவன்! நெருப்பால் ஆலிங்கனம் செய்யப்பட்டதால் துாய்மையானவன்! என்ன ஆச்சர்யம்! தேவனே எங்களின் ஆன்மாவையும் துாய்மைப்படுத்த உன்னை வணங்குகிறோம்.

உத்புல்ல பத்ரநயனம் தில புஷ்பக நாஸிகம்!

பக்த மானஸஹாரி த்வத் ரூபலாவண்ய மைச்வரம்!!

தாமரை கண்களை உடையவனே! எள்ளின் பூ போன்ற மூக்கு கொண்டவனே! பக்தரின் மனதை கொள்ளை கொள்ளும் உடல் அழகு கொண்டவனே! உன் திவ்யமான வடிவை கண்டாலே எங்களுக்கு ஐஸ்வர்யம் சேரும்.

ஸக்ருதா லோகனாதேவ ஜன்ம சாபல்ய தாயகம்!

சேஷ காலம் து பக்தானாம் வாஸோஸ்து ஹ்ருத்குஹாந்த்ரே!!

நொடிப் பொழுது உன்னை காண்பதும் பிறவிப்பயனைக் கொடுக்கும். இனி வரும் காலம் பக்தர்களின் மனம் என்ற குகைக்குள் மறைந்திருந்து அந்தரங்கனாக அருள்புரிவீராக.

வல்லபாசார்ய ஸம்க்லுப்த மோதகம் மோததாயகம்!

மாமகாபீஷ்ட சித்யர்த்தம் ததாமி ப்ரதிவர்தகம்!!

வல்லபாசார்யர் விசேஷமான இட்லி தந்து உபசரித்ததில் திருப்தி அடைந்தாய் என நான் அறிவேன்! எங்களின் விருப்பம் நிறைவேற நீ விரும்புவதை என்றும் அளித்து மகிழ்வோம்.

துக்தார்ணவ மஹத்தாம்னி ஸ்ரீ சுதர்சன சந்நிதெள!

திவ்ய தேசஸ்த வரதம் நெளமி முக்தி சுகப்ரதம்!!

பாற்கடலில் இருப்பவனே! சுதர்சன மூர்த்தியுடன் அமர்ந்தவனே! பக்தர்களுக்கு முக்தி, சுகம் என்னும் வரங்களை அளிப்பவனே! திவ்யதேசமான காஞ்சியில் உள்ள வரதனே! உன்னை வணங்குகிறேன்.

ஏகவாரேண புண்யம் ஸ்யாத் த்விவாரம் புண்யமுத்தமம்!

த்ரிவாரம் புண்யமத்யன்தம் தர்சனாத் ஜீவிதாவதிம்!!

ஒரு முறை உன் திவ்ய வடிவைக் கண்டாலே புண்ணியம் அல்லவா! இருமுறை பார்த்தால் மிக புண்ணியம் அல்லவா! ஒருவன் தன் வாழ்நாளில் மூன்று முறை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு புண்ணியம் என்பதை அளக்க முடியாது.

உத்தானே வா சயானே வா தர்ஷனம் ஸத்ஸுமங்களம்!

வக்ஷஸ்தல் ஸ்ரீயா ஸார்த்தம் ஸர்வ ஸெளபாக்ய தாயகம்!!

நின்ற, படுத்த கோலத்தில் உன்னை தரிசிப்பது நல்ல மங்களத்தை அளிக்கக் கூடியது. எப்படியானாலும் மார்பினில் மகாலட்சுமியுடன் சேர்ந்திருக்கும் காட்சி எல்லா சவுபாக்கியங்களையும் அளிக்க வல்லது.

தொடரும்






      Dinamalar
      Follow us