sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

உணவுக்கும் உணர்வுக்கும் ஜாதியில்லை

/

உணவுக்கும் உணர்வுக்கும் ஜாதியில்லை

உணவுக்கும் உணர்வுக்கும் ஜாதியில்லை

உணவுக்கும் உணர்வுக்கும் ஜாதியில்லை


ADDED : ஜூன் 15, 2010 04:33 PM

Google News

ADDED : ஜூன் 15, 2010 04:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுவாமி விவேகானந்தர் கேத்ரி பகுதியில் சுற்றுப்பயணத்தில் இருந்தார். அவரைப் பார்க்க பக்தர்கள் பலர் வந்தனர். அவர்களை சுவாமி சந்தித்து உபதேசம் செய்தார். மூன்று நாட்கள் தொடர்ந்து உறங்கவோ, உண்ணவோ செய்யாமல் இந்தப் பணி தொடர்ந்தது. ஒருவழியாக நிகழ்ச்சிகளை முடித்து அவர் தங்கியிருந்த இடத்துக்கு திரும்பிய போது கடும் பசியாக இருந்தது.

""எனக்கு பசிக்கிறது, ஏதாவது தருவாயா?'' என்று அங்கிருந்த பணியாளரிடம் கேட்டார் சுவாமிஜி.

""சுவாமி! சப்பாத்திகள் இருக்கின் றன. அதை உங்களுக்கு கொடுக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால், நான் தாழ்த்தப்பட்டவன். எனது கையால் தரப்பட்ட சப்பாத்திகளை சாப்பிட்டதாக கேத்ரி மகாராஜாவுக்கு தெரிந்தால் என்னைக் கொன்றே போட்டு விடுவார்,' 'என்று பயத்துடன் சொன்னான் அவன்.

சுவாமிஜி அவனிடம், ""உணவு கொடுக்க ஏது ஜாதி! நீ அவற்றை எடுத்து வா,'' என்றார். அந்தப் பணியாளரும் சப்பாத்திகளை பயந்தபடியே யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்து கொடுத்தார். சுவாமிக்கு அவற்றை சாப்பிட்டு விட்டு, ""தேவாமிர்தம் போல் இருந்தது<,' ' என்று பாராட்டினார். அது மட்டுமல்ல! மகாராஜாவிடம் சொல்லி, அந்த ஊழியரின் பணியைப் பாராட்டி சம்பள உயர்வு அளியுங்கள்,'' என்று சிபாரிசும் செய்தார். உணவுக்கும் ஜாதியில்லை, மனிதனின் உணர்வுகளுக்கும் ஜாதியில்லை. புரிகிறதா!






      Dinamalar
      Follow us