
* விநாயகரை வழிபட்டால் உடனடியாக பலன் கிடைக்கும்.
* மா, பலா, வாழை, கரும்பு ஆகியவற்றை நான்கு கைகளில் ஏந்தியபடி ஐந்தாவது கையான துதிக்கையில் கொழுக்கட்டை வைத்திருப்பவர் பாலகணபதி.
* விநாயகருக்கு 16 வகை வடிவங்கள் உண்டு. இதை 'சோடச விநாயகர்' என்பர். இதில் பாலகணபதியே முதன்மையானவர்.
* முற்றிய எருக்கஞ் செடியின் வேரில் விநாயகர் உருவம் சுயம்புவாக உருவாகும். சித்தர்கள் இவரை வழிபடுவர்.
* மனித முகத்தோடு இருக்கும் நரமுக கணபதி திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகிலுள்ள செதிலப்பதியில் இருக்கிறார். யானைமுகத்தை ஏற்பதற்கு முன்புள்ள விநாயகர் இவர்.
* திருச்சி லால்குடிக்கு அருகிலுள்ள 'அன்பில்' என்னும் சிவத்தலத்தில் திருஞானசம்பந்தரின் தேவாரத்தை ரசித்துக் கேட்ட செவிசாய்த்த விநாயகர் உள்ளார்.
* மதுரை மீனாட்சியம்மன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் முக்குறுணி விநாயகருக்கு சன்னதி உள்ளது.
* முருகன் வள்ளியை திருமணம் செய்ய உதவி செய்தவர் விநாயகர். இதனை அருணகிரிநாதர் திருப்புகழில் 'அக்குறமகளுடன் அச்சிறுமுருகனை அக்கண மணமருள் பெருமாளே' என்கிறார்.
* விநாயகரை முழுமுதல் கடவுளாக வழிபடுவதற்கு 'காணாபத்யம்' என்று பெயர். இதன்படி படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களை நடத்தி பிரபஞ்சத்தை விநாயகரே இயக்குகிறார்.
* கடவுள் உயர்ந்தவராக இருந்தாலும் அவரைத் தாங்கும் சக்தி நம் மனதிற்கு உண்டு என்பதை உணர்த்தவே பெரிய உருவம் கொண்ட விநாயகருக்கு சிறிய மூஞ்சூறு வாகனமாக உள்ளது.
* ஆவணி வளர்பிறை சதுர்த்தி முதல் புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி வரை விநாயகர் சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
* திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உக்கிர தெய்வமாக இருந்த போது, அம்மனுக்கு எதிரில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்தார் ஆதிசங்கரர். 'உக்கிரம் தணித்த விநாயகர்' எனப்படும் இவரை வழிபட்டால் மனஅமைதி கிடைக்கும்.
* நடனக்கலையில் வல்லவரான சிவனைப் போல விநாயகரும் நாட்டியம் ஆடுவதில் வல்லவர். நர்த்தன விநாயகரை வழிபட்டால் மகிழ்ச்சி நிலவும்.
* 'காங்கி டெக்' என்னும் புத்தமதக் கடவுளுடன் இணைந்து அருள்புரியும் விநாயகர் 'கவான்வின் ஷேர் விநாயக்ஷா' எனப்படுகிறார். ஜப்பானில் உள்ள யோகப் பயிற்சியாளர்கள் இவரை வழிபடுகின்றனர்.
* முதற்கடவுளான விநாயகரும், மங்கள மூர்த்தியான ஆஞ்சநேயரும் இணைந்த திருக்கோலம் ஆதியந்தப்பிரபு. இவரை வழிபட்டால் நினைத்த செயல் சிறப்பாக நிறைவேறும்.
* இலங்கை கதிர்காமத்தில் முறிவண்டி விநாயகர் கோயில் உள்ளது.
* பசுஞ்சாணம், களிமண், மஞ்சள், வெல்லம், சந்தனம், அரிசிமாவு ஆகிய ஏதேனும் ஒன்றில் செய்து விநாயகரை வழிபடலாம். 'பிடித்து வைத்தால் பிள்ளையார்' என்று இதை சொல்வார்கள்.