
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்லோகம்
யம் யம் வாபி ஸ்மரந்பாவம் த்யஜத்யந்தே கலேவரம்!
தம் தமேவைதி கெளந்தேய ஸதா தத்பாவபாவித:!!
தஸ்மாத் ஸர்வேஷு காலேஷுமாமநுஸ்மர யுத்யச!
மய்யர்பிதமநோபுத்திர் மாமே வைஷ்யஸ்ய ஸம்ஸயம்!!
பொருள்
குந்தியின் மைந்தனே! அர்ஜுனா! கடைசி காலத்தில் மரணத்தருவாயில் மனிதன் எந்த வடிவத்தை சிந்தித்தபடி தன் உயிரை விடுகிறானோ, மறுபிறவியில் அந்த வடிவத்தையே அடைவான். ஏனெனில் அவன் அந்த சிந்தனையில் இருந்திருக்கிறான். எனவே, எல்லாக் காலங்களிலும் என்னையே நீ சிந்தித்துக் கொண்டிரு. போரில் ஈடுபட்டாலும் கூட மனம், புத்தியை என்னிடத்தில் அர்ப்பணித்து விடு! சந்தேகமின்றி வாழ்வின் முடிவில் என்னை அடைவாய்.

