
ஜூன் 1, வைகாசி 18: மாத சிவராத்திரி, கழற்சிங்க நாயனார் குருபூஜை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம், திருப்போரூர் முருகன் அபிேஷகம், அகோபிலமடம் 39வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்.
ஜூன் 2, வைகாசி 19: போதாயன அமாவசை, கார்த்திகை விரதம், திருநெல்வேலி கைலாசபுரம் கைலாசநாதர், புட்டாபுரத்தி அம்மன் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், திருப்பரங்குன்றம் முருகன் புறப்பாடு, ரத்தினகிரி பாலமுருகன் தங்கத்தேர்.
ஜூன் 3, வைகாசி 20: அமாவாசை விரதம், அமாசோம பிரதட்சிணம், திருக்கோஷ்டியூர் நம்பி திருநட்சத்திரம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மூலவருக்கு திருமஞ்சனம், சிவகாசி விஸ்வநாதர் உற்ஸவம் ஆரம்பம், மன்னார்குடி ராஜகோபாலர் புறப்பாடு, திருக்கண்ணபுரம் சவுரிராஜர் விபீஷணருக்கு நடையழகு சேவையருளல், ஏரல் அருணாசல சுவாமிகள் திருவிழா.
ஜூன் 4, வைகாசி 21: சந்திர தரிசனம், வாஸ்து நாள், காலை 9:58 - 10:34 மணிக்குள் மனை, மடம், ஆலயம், கிணறுக்கு வாஸ்து பூஜை செய்தல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம், சுவாமிமலை முருகன் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், சிவகாசி விஸ்வநாதர் பூதவாகனம், சோழவந்தான் ஜனகை மாரியம்மன் சிம்ம வாகனம்.
ஜூன் 5, வைகாசி 22: ரம்பா திரிதியை, மாதவி விரதம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம், சிவகாசி விஸ்வநாதர் காமதேனு வாகனம், ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு, சோழவந்தான் ஜனகை மாரியம்மன் யாளி வாகனம்.
ஜூன் 6, வைகாசி 23: முகூர்த்த நாள், சதுர்த்தி விரதம், நம்பியாண்டார் நம்பி குருபூஜை, குரங்கணி முத்துமாரியம்மன் வருஷாபிேஷம், சிவகாசி விஸ்வநாதர் காலையில் பூச்சப்பரம், இரவில் ரிஷப வாகனம், சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், தேரெழுந்துார் ஞானசம்பந்தர் புறப்பாடு, சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கமலாசனம்.
ஜூன் 7, வைகாசி 24: நமிநந்தியடிகள், சேக்கிழார் குருபூஜை, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் ஊஞ்சல் சேவை, சிவகாசி விஸ்வநாதர் புறப்பாடு, திருமயம் சத்தியமூர்த்தி பவனி, திருவிடைமருதுார் பிரகத்குசாம்பிகை எழுந்தருளல், சங்கரன்கோயில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

