sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

படிப்பு செலவு பாடாய்படுத்துகிறதா?

/

படிப்பு செலவு பாடாய்படுத்துகிறதா?

படிப்பு செலவு பாடாய்படுத்துகிறதா?

படிப்பு செலவு பாடாய்படுத்துகிறதா?


ADDED : ஜூன் 23, 2015 12:06 PM

Google News

ADDED : ஜூன் 23, 2015 12:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி, கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்க்க கல்விச் செலவு கையைக் கடித்துக் கொண்டிருக்கும் காலம் இது. இந்த சமயத்தில், தேவையான பொருளாதார வளம் கிடைப்பதற்கு திருவாவடுதுறை மாசிலாமணீசுவரர் மற்றும் ஒப்பிலாமுலையம்மையை மனதில் நினைத்து பாட வேண்டிய பதிகம் இது. ஞானசம்பந்தர் இதை அருளியுள்ளார்.

இடரினும் தளரினும் எனது உறு நோய்

தொடரினும் உனகழல் தொழுது எழுவேன்;

கழல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை

மிடறினில் அடக்கிய வேதியனே.

இதுவே எமை ஆளுமாறு?

ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்

அதுவோ உனது இன்னருள்?

ஆவடுதுறை அரனே.

வாழினும் சாவினும் வருந்தினும் போய்

வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்;

தாழ்இளம் தடம்புனல் தயங்கு சென்னிப்

போழ் இளமதி வைத்த புண்ணியனே.

இதுவே எமை ஆளுமாறு?

ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்

அதுவோ உனது இன்னருள்?

ஆவடுதுறை அரனே.

நனவினும் கனவினும் நம்பா, உன்னை

மனவினும் வழிபடல் மறவேன், அம்மான்

புனல்வரி நறுங் கொன்றைப் போது அணிந்த

கனல்எரி அனல்புல்கு கையவனே.

இதுவே எமை ஆளுமாறு?

ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்

அதுவோ உனது இன்னருள்?

ஆவடுதுறை அரனே.

தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும்

அம்மலர் அடிஅலால், அரற்றாது என்நா;

கைம்மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால்

மும்மதில் எரி எழ முனிந்தவனே.

இதுவே எமை ஆளுமாறு?

ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்

அதுவோ உனது இன்னருள்?

ஆவடுதுறை அரனே.

கையது வீழினும் கழிவு உறினும்

செய்கழல் அடிஅலால் சிந்தை செய்யேன்

கொய் அணி நறுமலர் குலாய சென்னி

கைஅணி மிடறு உடை மறையவனே.

இதுவே எமை ஆளுமாறு?

ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்

அதுவோ உனது இன்னருள்?

ஆவடுதுறை அரனே.

வெந்துயர் தோன்றி ஓர் வெருஉறினும்

எந்தாய், உன் அடிஅலால் ஏத்தாது, என் நா;

ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த

சந்தவெண் பொடிஅணி சங்கரனே.

இதுவே எமை ஆளுமாறு?

ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்

அதுவோ உனது இன்னருள்?

ஆவடுதுறை அரனே.

வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்

அப்பா உன் அடி அலால் அரற்றாது, என் நா;

ஒப்புடை ஒருவனை உரு அழிய

அப்படி அழல் எழ விழித்தவனே.

இதுவே எமை ஆளுமாறு?

ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்

அதுவோ உனது இன்னருள்?

ஆவடுதுறை அரனே.

பேர் இடர் பெருகி, ஓர் பிணி வரினும்

சீர் உடைக் கழல் அலால், சிந்தை செய்யேன்;

ஏர் உடை மணி முடி இராவணனை

ஆர் இடர் பட, வரை அடர்த்தவனே.

இதுவே எமை ஆளுமாறு?

ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்

அதுவோ உனது இன்னருள்?

ஆவடுதுறை அரனே.

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்

ஒண்மலர் அடிஅலால் உரையாது, என் நா;

கண்ணனும் கடிகமழ் தாமரை மேல்

அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே.

இதுவே எமை ஆளுமாறு?

ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்

அதுவோ உனது இன்னருள்?

ஆவடுதுறை அரனே.

பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்

அத்தா உன்அடி அலால் அரற்றாது என்நா

புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்

பத்தர்கட்கு அருள் செய்து பயின்றவனே.

இதுவே எமை ஆளுமாறு?

ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்

அதுவோ உனது இன்னருள்?

ஆவடுதுறை அரனே.

அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த

இலைநுனை வேல்படை எம் இறையை

நலம்மிகு ஞானசம் பந்தன் சொன்ன

விலைஉடை அருந்தமிழ் மாலை வல்லார்

வினை ஆயின நீங்கிப்போய்

விண்ணவர் வியன் உலகம்

நிலையாக முன்ஏறுவர்;

நிலைமிசை நிலை இலரே.






      Dinamalar
      Follow us