sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

பெண் வீட்டுக்காரர் பெரியவரா ? மாப்பிள்ளை வீட்டார் உயர்ந்தவரா ?

/

பெண் வீட்டுக்காரர் பெரியவரா ? மாப்பிள்ளை வீட்டார் உயர்ந்தவரா ?

பெண் வீட்டுக்காரர் பெரியவரா ? மாப்பிள்ளை வீட்டார் உயர்ந்தவரா ?

பெண் வீட்டுக்காரர் பெரியவரா ? மாப்பிள்ளை வீட்டார் உயர்ந்தவரா ?


ADDED : ஜூலை 23, 2010 05:58 AM

Google News

ADDED : ஜூலை 23, 2010 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவனையும், நாராயணனையும் ஒன்றிணைந்த வடிவில் சங்கரநாராயணராக தரிசிக்க வேண்டும் என அம்பாள் தவம் செய்த சங்கரநாராயணர் கோயில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கோடரங்குளத்தில் உள்ளது. நாளை இங்கு ஆடித்தபசு சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

தல வரலாறு: பெண் வீட்டுக்காரன் பெரியவனா, மாப்பிள்ளை வீட்டுக்காரன் உயர்ந்தவனா என்ற சண்டை நம் ஒவ்வொரு வீட்டிலும் அன்றாடம் நடக்கும் பிரச்னை. இரண்டும் சமம் தான்; இதில் உயர்வு தாழ்வுக்கே இடமில்லை என இந்த பிரச்னைக்கு முதல் முற்றுப்புள்ளி வைத்தது அன்னை உமையவள் தான். தன் கணவரையும், அண்ணனையும் ஒருசேர காணும் எண்ணம் அவளுக்கு ஏற்பட்டது. சிவபெருமான் நாராயணருடன் இணைந்து,

சங்கரநாராயணராக அவளுக்கு காட்சி தந்தார். இந்தக் காட்சி சாதாரணமாக கிடைத்து விடுமா? அதற்காக 'தபஸ்' (தவம்) செய்தாள். அதையே

'ஆடித்தபசு' என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். நெல்லை மாவட்டத்தின் வடக்கே ஒரு சங்கரன்கோவில் இருப்பதால், இதை 'தெற்கு சங்கரன்கோவில்' என்பர். இங்கும் ஆடித்தபசுவிழா மிகவும் பிரசித்தம்.

பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசித்த சிவபக்தர் உஞ்சவிருத்தி (தானம்) பெற்று வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவர் காகங்களுக்கு சாதம் வைத்தபோது அவை சாதத்தை ஒரு வனத்திற்குள் கொண்டு சென்றதை கண்டு பின்தொடர்ந்தார். ஓரிடத்தில் சாதம் வைத்த காகங்கள், மலரையும் அலகால் தூவி

வழிபட்டதைக் கண்டார். அவை வழிபட்ட இடத்தில், தோண்டியபோது லிங்கம் இருந்ததைக் கண்டு வழிபட்டார். ஒருசமயம் அவர் ஊருக்கு வராமல் போகவே, மக்கள் வனத்தினுள் சென்று பார்த்தனர். அங்கு அவர் சிவன் குடியிருப்பதாக கூறிவிட்டு லிங்கத்தில் ஐக்கியமானார். அதுவே

சங்கரலிங்கம் ஆனது. பின் மக்கள் இவ்விடத்தில் கோயில் எழுப்பினர்.

ராகுகேது லிங்கம்: தாமிரபரணியும், மணி முத்தாறும் கலக்குமிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. சிவன், பாறை வடிவில் வடக்கு நோக்கி இருக்கிறார். இவரது மேனியில் நாகங்கள் உள்ளன. அதாவது ராகு, கேது

அம்சமாக இருப்பது சிறப்பு.

அன்னை உமையவள், பூலோகத்திற்கு

தவமிருக்க வந்த போது, தேவர்கள் பசுக்களாக மாறி அவளைத் தரிசிக்க வந்தனர். அவள் பிரகாசமான முகமுடையவள். எனவே அன்னையை 'கோமதி' என்றனர். 'கோ' என்றால் 'பசு'. 'மதி' என்றால், 'நிலாபோன்ற முகமுடையவள்'. இவர் 'ஆ' ஆகிய பசுக்களை (தேவர்கள்) காத்தமையால்இவள் 'ஆவுடையம்மாள்' என்றும் அழைக்கப்படுகிறாள்.

சிறப்பம்சம்: சுவாமி, கோமதி அம்பாள் இருவரும் தனித்தனி கொடிமரத்துடன் அருளுகின்றனர். சிவத்தலங்களில் சிவன் சன்னதி முன்பாக இருக்கும் அதிகாரநந்தி, இங்கு அம்பாள் சன்னதி முன்பு இருக்கிறார். சங்கரநாராயணர் தனி சன்னதியில் உள்ளார். பிரகாரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், காசி விஸ்வநாதர், சண்முகர், சனீஸ்வரர், பைரவர் உள்ளனர். லிங்கத்தில் ஐக்கியமான ராமலிங்கருக்கு சன்னதி இருக்கிறது. ஆடிமாத பரணி

நட்சத்திரத்தில் இவருக்கு விசேஷ வழிபாடு செய்யப்படும்.

பிரார்த்தனை: விஷக்கடி தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் இத்தலத்தில் இறைவனுக்கு நாகம், தேள் முதலான உருவங்களை வாங்கி

உண்டியலில் போடுவர். உப்பு, மிளகும் காணிக்கையாக்கி வழிபடுகின்றனர். கை, கால் உருவ பொம்மைகளும் நேர்த்திக்

கடனாக செலுத்துவர்.

இங்கு பிறந்த குழந்தைகளை தத்து கொடுத்து வாங்கும் சடங்கையும்

செய்கிறார்கள். 

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ., தூரத்தில்  இவ்வூர் உள்ளது. பாபநாசம் பஸ்களில், அம்பாசமுத்திரம் சென்று அங்கிருந்து ஆட்டோ அல்லது மினிபஸ்களில்

கோடரங்குளத்தை அடையலாம்.

நடை திறப்பு : காலை 6- 10 மணி, மாலை 5 - 7 மணி.  போன்: 04634- 223 821.






      Dinamalar
      Follow us