sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூலை 12, 2024 08:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2024 08:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரா.சாரதா, ஜன்பத், டில்லி.

* முன்னோர் சாபம் என்றால்...

முன்னோருக்கான சடங்கு, தர்ப்பணம், திதியைக் கொடுக்காவிட்டால் சந்ததியைப் பாதிக்கும். இதுவே முன்னோர் சாபம்.

ர.ராஜா, பந்தலுார், நீலகிரி.

*பல வாகனங்களில் சுவாமி வலம் வருகிறாரே...

எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார். அவற்றின் மீது அன்பு காட்ட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

பா.குமாரசுவாமி, நல்லாத்துார், கடலுார்.

*காலசர்ப்ப தோஷம் என்றால் என்ன?

ஜாதகத்தில் ராகு, கேதுவிற்கு இடையே மற்ற கிரகங்கள் இருப்பது காலசர்ப்ப தோஷம். இதற்கு கோயிலில் பரிகாரம் செய்யுங்கள்.

ம.பார்க்கவி, திப்பசந்திரா, பெங்களூரு.

*பதவி உயர்வு பெற....

அனுமனுக்கு சனிக்கிழமையன்று துளசி அர்ச்சனை செய்து, வடைமாலை சாத்துங்கள்.

வி.சித்ரா, பரமக்குடி, ராமநாதபுரம்.

*ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்கிறார்களே...

ஒருவரின் ராசிக்கு ஒன்பதில் குரு வந்தால் துன்பம் விலகும். கஷ்டமான சூழலில் இருந்து தப்பும் போது இப்படிச் சொல்வர்.

பா.மங்கை, நடுவக்குறிச்சி, திருநெல்வேலி.

*தேங்காயை சிதறுகாயாக உடைப்பது ஏன்?

தேங்காயை உடைக்கும் போது அது நான்கு பக்கமும் சிதறும். அதுபோலவே தடைகள் விலக இதைச் செய்கிறோம்.

இ.ராசுக்குட்டி, வண்டலுார், செங்கல்பட்டு.

*இலையில் எப்படி பரிமாற வேண்டும்?

இனிப்பு, காய்கறி, சாதம் என இலையில் பரிமாற வேண்டும்.

த.பரமேஸ்வரன், தாடிக்கொம்பு, திண்டுக்கல்.

*சுபநிகழ்ச்சியில் கொடுத்த வெற்றிலையை பூஜைக்கு பயன்படுத்தலாமா?

பயன்படுத்தக் கூடாது. மரியாதை, கவுரவம் கருதி இதை கொடுக்கின்றனர்.

க.முருகராஜ், நாகர்கோவில், கன்னியாகுமரி.

*நவக்கிரக யாகத்தில் வெவ்வேறு நிறத்தில் வஸ்திரம் வைப்பது ஏன்?

ஒவ்வொரு கிரகமும் ஒரு நிறத்தில் இருப்பதால் பல நிறங்களில் வஸ்திரம் வைத்து பூஜிக்கிறோம்.

அ.புகழேந்தி, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி.

*கண்ணாத்தாள், திரவுபதி -ஒரே பெண் தெய்வமா?

இல்லை. காளியின் அம்சம் கண்ணாத்தாள். பாண்டவரின் மனைவி திரவுபதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us