sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

பொறுப்பை கடவுளிடம் விடுங்கள் அரவிந்தரின் அற்புத மொழிகள்

/

பொறுப்பை கடவுளிடம் விடுங்கள் அரவிந்தரின் அற்புத மொழிகள்

பொறுப்பை கடவுளிடம் விடுங்கள் அரவிந்தரின் அற்புத மொழிகள்

பொறுப்பை கடவுளிடம் விடுங்கள் அரவிந்தரின் அற்புத மொழிகள்


ADDED : அக் 08, 2010 04:51 PM

Google News

ADDED : அக் 08, 2010 04:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனிதர்களை நேசியுங்கள். அவர்களுக்கு முடிந்த தொண்டுகளைச் செய்யுங்கள். ஆனால்,

யாருடைய பாராட்டுதலுக்கு ஆசைப்படாமல் இருப்பதில் அதிக கவனம் கொள்ளுங்கள்.

* விவேகமுள்ள சிறந்த நண்பன் ஒருவன் தான். அவனே நம்மைக் காக்கும் இறைவன். ஏனென்றால் எப்போது நம்மை அடிக்க வேண்டும், நம்மை அணைக்க வேண்டும் என்பதை அவன் மட்டுமே அறிவான்.

* வெறுமனே யாருக்கும் பயன்படாமல் வாழுகின்ற வாழ்க்கை பயனற்றது. நல்ல லட்சியங்களை உருவாக்கிக் கொண்டு அதைநோக்கிப் பயணிப்பதில் தான் வாழ்வின் அர்த்தம் அடங்கி இருக்கிறது. நற்பணிகளைச் செய்வதற்காகத்தான் இறைவன் நம்மை இப்பூமிக்கு அனுப்பி இருக்கிறான்.

* உங்களைத் தூய்மையாக்கும் பொறுப்பினை கடவுளிடம் முழுமையாக ஒப்படைத்து விடுங்கள். அவரே அனைத்து தீமைகளையும் போக்கி, நம்மை நல்வழிப்படுத்துவார். இல்லாவிட்டால் புறவுலகில் இருக்கும் தீமை நம்மை வீழ்த்திவிடும்.

* கடவுளின் கண்களுக்கு அற்பமானவர்கள் என்று யாரும் இல்லை. அதுபோல உங்கள் கண்களுக்கும் அற்பமானவர்கள் என்று யாரும் இருக்கக்கூடாது.

* உங்களுள் எழும் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றாலும் சுற்றியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சி

அனுபவங்களை வழங்குங்கள். அதுவே உங்களுக்குள் இருக்கும் கடவுளுக்கு அளிக்கும் காணிக்கையாகட்டும்.

* ஆண்டவனின் அருளாட்சியில் தீமை என்பது சிறிதும் இல்லை. நமக்கு நன்மையையோ அல்லது நன்மை தருவதற்கான முயற்சியையோ தான் கடவுள் செய்து கொண்டிருக்கிறார்.

* உத்தமச் செயல்களைச் செய்வதாக இருந்தால் உடனே செய்து விடுங்கள். ஏனென்றால், மனம் செய்வோமா வேண்டாமா என்று சலனப்படும் இயல்பு கொண்டது.

* முடிந்தால் உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களைக் கைதூக்கி விடுங்கள். அவர்களது ஆற்றலை இழந்து விடும்படி செய்யும் இழிசெயலை ஒருபோதும் செய்யாதீர்கள்.

* உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள். உலகம் எப்படிப்பட்டது, கடவுள் எத்தகையவர் என்று அறிய முற்படுங்கள். பயனற்ற போலி இன்பம் தரும் கற்பனைகளை விட்டொழியுங்கள்.

* பாவங்களிலே மிகவும் கொடிய பாவம், பாவிகளை வெறுப்பதாகும். ஏனெனில், அது கடவுளை வெறுப்பதற்கு நிகராகும். அவர்களும் திருந்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள். 






      Dinamalar
      Follow us