தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/தெரிந்து கொள்வோமா!

தெரிந்து கொள்வோமா!

தெரிந்து கொள்வோமா!


ADDED : ஆக 17, 2018 02:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2018 02:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* இரவு 9:00 மணி - அதிகாலை 4:00 மணி வரை நதிகளில் குளிப்பது கூடாது. சூரிய, சந்திர கிரகண காலத்திற்கு இந்த விதி பொருந்தாது.

* அமாவாசையன்று வெளியிடங்களில் சாப்பிடக் கூடாது. அன்று வீட்டில் அன்னதானம் செய்வது சிறப்பு.

* கோயில், வீட்டு பூஜையறையில் மட்டுமே காயத்ரி மந்திரம் ஜபிக்க வேண்டும்.

* தீபாராதனையின் போது சுவாமியின் முழு உருவத்துக்கு மூன்று முறை தீபம் காண்பிக்க வேண்டும்.

* பெண்கள் வீட்டில் கோலமிடாமலும், விளக்கு ஏற்றாமலும் கோயிலுக்கு செல்ல கூடாது.

* எரியும் விளக்கில் எண்ணெய்யைக் கையால் தொடுவதும், அதை தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

* சிவன் - வில்வம், விஷ்ணு - துளசி, விநாயகர் - அருகம்புல், பிரம்மா - அத்தி இலை ஏற்றது. இதை மற்றவருக்கு வைக்கக்கூடாது.

* பெண்கள் வேல், சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய கூடாது.

* கோயில்களில் சூடம், தீபத்தை கைகளில் ஏற்றி சுவாமிக்கு காட்டக்கூடாது.

* நைவேத்யமாக படைத்த தேங்காயை சமையலில் சேர்த்து மீண்டும் அதை சுவாமிக்கு படைக்கக் கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us