ADDED : ஏப் 29, 2022 08:48 AM

* இரவு 9:00 - நள்ளிரவு 3:00 மணி வரை நதிகளில் குளிப்பது கூடாது. சூரிய, சந்திர கிரகண காலத்திற்கு இந்த விதி பொருந்தாது.
* அமாவாசையன்று வீட்டில் தான் சாப்பிட வேண்டும். வெளியில் சாப்பிடக் கூடாது. அன்று வீட்டில் அன்னதானம் செய்வது சிறப்பு.
* கோயில், வீட்டு பூஜையறையில் துாய்மையுடன் காயத்ரி மந்திரம் ஜபிக்க வேண்டும்.
* வீட்டில் கோலம் இடாமலும், விளக்கேற்றாமலும் கோயிலுக்கு பெண்கள் செல்வது கூடாது.
* எரியும் விளக்கில் எண்ணெய்யைக் கையால் தொடுவதும், அதை தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
* சிவன் - வில்வம், விஷ்ணு - துளசி, விநாயகர் - அருகம்புல், பிரம்மா - அத்தி இலை ஏற்றது. இதை மாற்றி மற்றவருக்கு வைத்து வழிபடுவது கூடாது.
* பெண்கள் வேல், சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது கூடாது.
* கோயில்களில் சூடம், தீபத்தை கைகளில் ஏற்றி சுவாமிக்கு காட்டுவது கூடாது.
* நைவேத்யமாக படைத்த தேங்காயை சமையலில் சேர்த்து மீண்டும் அந்த உணவை சுவாமிக்கு படைப்பது கூடாது.
* தீபாராதனையின் போது சுவாமியின் திருவடிக்கு நான்கு முறையும், முகத்திற்கு ஒரு முறையும் காட்டிய பின், முழு உருவத்துக்கு மூன்று தடவை காண்பிக்க வேண்டும்.
