ADDED : ஜூன் 23, 2023 11:58 AM

* கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது சிறப்பு.
* கடல் கடந்து வியாபாரம் செய்து சம்பாதித்தாலும் இருப்பதுதான் இருக்கும். அதைத்தாண்டி இம்மியளவு கூட பெற முடியாது.
* எதையும் கூடுதலாக பேசாமல், சொல்வதை தெளிவாகச் சொல்.
* ஒருவர் எவ்வளவு பாடுபட்டு செல்வம் சேர்த்தாலும் அவரின் விதிப்படிதான் செல்வம் சேரும்.
* நிலத்தின் தன்மையால் தண்ணீர் சுவையாகும். நல்லவர்களின் பண்போ அவர்களின் நற்செயலால் அறியப்படும்.
* திருநீறு பூசாத நெற்றி பொலிவு தராது. மணம் மிகுந்த நெய் சேர்க்காத உணவும் வீணே.
* நல்ல பண்புகள் உடைய பெண்ணின் வீட்டில் எல்லா நன்மைகளும் நிறைந்திருக்கும்.
* அதிகாலையில் கண் விழித்ததும் கடவுளை வணங்கு.
* தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தையே காலத்துக்கும் நலமாக இருக்கும்.
* தாயை விடப் பெரிய கோயிலும், சிறந்த தெய்வமும் இல்லை.
* உனது வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் கடவுளின் செயலே.
* அரிசியும் நீரும் இல்லாத வெறும் பானையில் பொங்கல் பொங்கி வருமா? அதுபோல் நல்லதை செய்தால்தானே நல்லது கிடைக்கும்.
* கல்வியாளராக இல்லாமல் செல்வந்தராக இருக்கும் ஒருவரை உலகமே மதிக்கும்.
அழைக்கிறார் அவ்வையார்

