
ஜூன் 23 ஆனி 8: மாணிக்கவாசகர் குருபூஜை. சங்கரன் கோவில் கோமதியம்பாள் தங்கபாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் புறப்பாடு. திருத்தணி முருகப்பெருமான் கிளிவாகனம்.
ஜூன் 24 ஆனி 9: அமர்நீதி நாயனார் குருபூஜை. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் இத்தலங்களில் ஊஞ்சல் உற்ஸவம். ராஜபாளையம் பெத்தவநல்லுார் மாயூரநாதர் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம்.
ஜூன் 25 ஆனி 10: ஆனித்திருமஞ்சனம். சகல சிவன் கோயில்களிலும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபஆராதனை. சிதம்பரம் ஆவுடையார்கோயில் தலங்களில் தேர்.
ஜூன் 26 ஆனி 11: சாத்துார் ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் பவனி. ராமநாதபுரம் கோதண்டராமசுவாமி காலை இந்திரவிமானத்திலும் இரவு புஷ்ப பல்லக்கிலும் எழுந்தருளல்.மதுராந்தகம் கோதண்ட ராம சுவாமி கோயிலில் உற்ஸவம் ஆரம்பம்.
ஜூன் 27 ஆனி 12: திருத்தங்கல் நின்றநாராயணப்பெருமாள் தோளுக்கினியானில் பவனி. முத்துலாபுரம், காணாடுகாத்தான் உத்தரகோசமங்கை இத்தலங்களில் சிவபெருமான் புறப்பாடு. திருக்கோளக்குடி ககோளபுரீசுவரர் திருக்கல்யாணம்.
ஜூன் 28 ஆனி 13: முகூர்த்த நாள். ராமநாதபுரம் கோதண்டராமசுவாமி கோயில் தேர். திருநெல்வேலி நெல்லையப்பர் யானை வாகனம். அம்பாள் அன்ன வாகனத்தில் பவனி.
ஜூன் 29 ஆனி 14: முகூர்த்த நாள். பெரியாழ்வார், அழகிய சிங்கர் திருநட்சத்திரம். வீரவநல்லுார் பூமிநாதர் தெப்பம். செடி கொடிகள் வைக்க நன்று.

