ADDED : ஜூலை 07, 2015 12:32 PM

சிவன் கோவிலுக்குள் 25 பகுதிகள் இருக்க வேண்டும் என்பது விதி. அவை என்ன தெரியுமா?
1. சுவாமி மூலஸ்தானம்
2. அர்த்த மண்டபம்: சிவாச்சாரியார்கள் பூஜை செய்யும் இடம்
3. மகா மண்டபம்: பக்தர்கள் தரிசனத்திற்காக நிற்கும் இடம்
4. சண்டிகேஸ்வரர் சன்னிதி
5. அம்பாள் மூலஸ்தானம்
6. நிருத்த மண்டபம் (கலை நிகழ்ச்சி நடத்தும் இடம்)
7. பள்ளியறை
8. நடராஜர் சன்னிதி
9. துவஸதம்ப மண்டபம் (கொடிமரம் இருக்குமிடம்)
10. மடப்பள்ளி (நைவேத்யம் தயாரிக்கும் இடம்)
11. நால்வர் சன்னிதி (சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்)
12. கோசாலை(பசு பராமரிக்கும் இடம்)
13. அம்பாள் கோபுரம்
14. சந்தான குரவர் சன்னிதி
15. வாகன சாலை (விழாக்கால சப்பரம் வைக்குமிடம்)
16. விநாயகர் சன்னிதி
17. முருகன் சன்னிதி
18. வசந்த மண்டபம்
19. பைரவர் சன்னிதி
20. சூரியன் சன்னிதி
21. சந்திரன் சன்னிதி
22. ராஜகோபுரம் அல்லது நுழைவு வாசல்
23. அபிஷேகத் தீர்த்தக் கிணறு அல்லது தெப்பக்குளம்
24. மடப்பள்ளிக் கிணறு (தீர்த்தம் எடுக்குமிடம்)
25. தட்சிணாமூர்த்தி சன்னிதி
பெரிய கோவில்களில் சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனர் சன்னிதி, யாகசாலை, ஆகம நூலகம் ஆகியவையும் இருக்கும்.