ADDED : ஜூன் 20, 2010 04:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் கீழா புதுக்கோட்டை என்ற ஊர் உள்ளது. இங்குள்ள அரியநாயகி அம்மன் கோயில் பிரசித்தமானது. இப்பகுதியில் ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமணம் பேசி முடித்துவிட்டால் அரியநாயகி அம்மன் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபடுவர். கோயிலில் கௌளி(பல்லி சப்தம்) கேட்டால் அம்மன் உத்தரவு கொடுத்ததாக எண்ணி திருமணத்தேதியை நிச்சயிப்பர். அரியநாயகி அம்மனுக்கு ஆனியில் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.
- கோவீ. ராஜேந்திரன்