தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஜூலை 14, 2016 10:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2016 10:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* மீனாட்சி கல்யாணம், வள்ளி கல்யாணம், சீதா கல்யாணம் என கல்யாணத்திற்கு பெண் தெய்வத்தையே குறிப்பிடுவது ஏன்?

டி.இந்திராணி, சாத்தூர்.

ஒரு ஆண் மகனுக்கு தான, தர்மம், யாகம், முன்னோர் வழிபாடு செய்ய திருமணமான பின்னரே முழு அதிகாரத்தை சாஸ்திரம் அளித்துள்ளது. மற்றொன்று இல்லற வாழ்வின் பொறுப்புணர்ந்து, குடும்பத்திற்காக உழைக்கும் கடமை அவனுக்கு தரப்படுகிறது. இந்த இரண்டையும், ஒரு பெண்ணின் கரத்தை பற்றிய பிறகு தான் ஆண் அடைகிறான். எனவே குடும்ப வாழ்வில் பெண்களே முக்கியத்துவம் பெறுகின்றனர். இதனால் தான் திருமணங்களை பெண் தெய்வங்களின் பெயரால் குறிப்பிடுகின்றனர்.

* புதிதாக செய்த சுவாமி சிலைகளை ஜலவாசமாக நீருக்குள் வைப்பது ஏன்?

என்.ஜெ.ரவி விக்னேஷ், திருப்பூர்.

மண்ணிலிருந்து எடுக்கும் தங்கம் உடனே ஜொலிக்காது. மீண்டும் மீண்டும் நெருப்பில் இட்டு பக்குவப்படும் போது தான் ஜொலிக்கும். அதுபோல புதிய சிலைகள் அதற்குரிய தெய்வத் தன்மையை தாங்கும் சக்தியைப் பெற, மந்திரப் பூர்வமாக தானிய வாசம், ஜலவாசம், சயன வாசம் ஆகிய சடங்குகளைச் செய்வார்கள்.

ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபிப்பதால் என்னென்ன நன்மை உண்டாகும்?

ரோஜா ராஜா, நெய்வேலி.

நமசிவாய என்பதே ஐந்தெழுத்து மந்திரம். இதை ஜெபிப்பதால் எல்லா நன்மையும் கிடைக்கும். மந்திர ரத்னம் என்று இதற்குப் பெயர். உயர்ந்த ரத்தினம் நம்மிடம் இருந்தால் அதிர்ஷ்டம் கூடி தானே செல்வம் பெருகும். ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபிப்பதால் நாம் நினைப்பதெல்லாம் கைகூடும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மூவருமே தேவாரத்தில் இதன் பெருமையைப் பாடியுள்ளனர்.

கோவிலில் பிரசாதமாக கொடுத்த பூமாலையை வீட்டில் சுவாமி படத்திற்கு அணிவிக்கலாமா?

பாபு கிருஷ்ணராஜ், கோவை.

சுவாமி பிரசாதமாகக் கொடுக்கும் மாலைகளுக்கு நிர்மால்யம் என்று பெயர். இவற்றை மற்ற சுவாமி படங்களுக்கு சாத்தக் கூடாது.

சுப நிகழ்ச்சிகளில் கருப்பு ஆடை அணியக்கூடாது.. ஏன்?

கே.பார்வதி, கள்ளக்குறிச்சி.

கருப்பு என்பது துக்கத்தைக் குறிக்கும் நிறம் என்பதால் அணிந்து செல்லக் கூடாது.

** கோவிலில் கொடிமரத்திற்கும், பலிபீடத்திற்கும் இடையில் செல்லக் கூடாது என்பது ஏன்?

பி.வசந்தா சிவம், பெரம்பூர்.

கோவில் என்பது கருவறை முதல் ராஜ கோபுரம் வரையுள்ள பகுதி. இது மனித உடல் போன்றதாகும். கருவறை சிரசு எனப்படும் தலையைக் குறிக்கும். நடராஜர் எழுந்தருளியுள்ள மகா மண்டபம் இருதயத்தைக் குறிப்பதாகும். அதிலிருந்து பலிபீடம் வரை வயிறு, கொடிமரம் தொப்புள், ராஜ கோபுரம் திருவடிகள். எனவே கோவிலுக்குள் நுழைந்தவுடன் வலமாகச் சுற்றி எல்லா தெய்வங்களையும் முறையாக வழிபட்டு வெளியே வர வேண்டும். எங்கு குறுக்கே சென்றாலும் ஏதாவது ஒரு அங்கத்தை மிதித்த பாவம் உண்டாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us