தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஆக 25, 2016 12:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2016 12:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீட்டில் என்னென்ன ஹோமங்கள் செய்யலாம்? எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என ஏதேனும் விதிமுறை இருக்கிறதா?

கே.அஞ்சம்மாள், ராமநாதபுரம்.

வீட்டில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், ஆயுள் ஹோமம் போன்றவை செய்யலாம். குடும்பத்தினர் பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷ நாட்களிலும் ஹோமம் நடத்தும் மரபு இருந்தது. பர்த்டே, வெட்டிங்டே என்று பார்ட்டி வைத்து கொண்டாடுவது வெள்ளையர் வரவால் புகுந்தது. இது பிரபலமானவுடன் ஹோமம் செய்வது, கோவிலுக்குப் போவது போன்றவை மறைந்து விட்டன. எனவே வீட்டில் அடிக்கடி ஹோமம் நடத்தலாம். ஆண்டுக்கு ஒருமுறையாவது செய்வது அவசியம்.

விநாயகரையும் ஆஞ்சநேயரையும் சனி பிடிக்கவில்லை என்கிறார்களே.....ஏன்?

ஆர்.ஜான்சிராணி, சென்னை.

மண்ணில் பிறந்தவர்கள் எல்லோருக்குமே கிரகங்களால் நல்லதும் கெட்டதும் நடக்கவே செய்யும். ஸ்ரீராமருக்கு ஜென்ம ராசிக்கு குரு வந்த போது வனவாசம் ஏற்பட்டது. ஆனால், அவரது பக்தரான ஆஞ்சநேயருக்கு அவரது தவவலிமையினால் சனி பிடிக்கவில்லை என்ற செவிவழி செய்தி இருக்கிறது. விநாயகர் மண்ணில் பிறக்காத தெய்வம். எனவே அவரை சனி பிடிப்பதில்லை.

* குளிகை என்றால் என்ன? அதில் என்னென்ன செய்யலாம், செய்யக் கூடாது?

டி.சாய் ரோகித், கோவை.

ராகு,கேது கிரகங்கள் போல, குளிகை, மாந்தி என்பவற்றையும் முன்னோர் நிழல் கிரகங்களாக வகுத்தனர். சூரியன் முதலான கிரகங்கள் ஏழிற்கும் ஏழு நாட்களின் பெயர் சூட்டினார்கள். ராகுவிற்கு தினமும் ராகு காலமாகவும், கேதுவிற்கு எமகண்ட நேரமும் ஒதுக்கப்பட்டன. குளிகைக்கும் தினமும் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது. மாந்திக்கு, தமிழகத்தில் நேரம் ஒதுக்குவது வழக்கில் இல்லை. ஆந்திரா, கேரளம், கர்நாடகம், வடமாநிலங்களில் வழக்கில் உள்ளது. நல்ல செயல்கள் செய்யும் போது குளிகை காலம் பார்க்கத் தேவையில்லை. தாராளமாக செய்யலாம். பிதுர் (முன்னோர் வழிபாடு)

காரியங்கள் செய்யும் போது குளிகையில் செய்யக் கூடாது.

திருவிளக்கு பூஜையில் சுமங்கலிகளுடன் கன்னிப்பெண்களும் பங்கேற்கலாமா?

ஆர்.அபிதா, கூடுவாஞ்சேரி.

ஒன்றும் தவறில்லை. கன்னிப்பெண்கள் திருவிளக்கு பூஜை செய்யலாம். சுமங்கலிகளை வைத்து திருவிளக்கு பூஜை செய்வதாக சங்கல்பம் செய்து கொண்டால் கன்னிகளை உட்கார வைக்க வேண்டாம். மற்றபடி கோவில்களில் நிறைய பேர் செய்யும் பூஜையில் கலந்து கொள்ளலாம்.

* நேர்த்திக்கடனை நிறைவேற்ற கால அவகாசம் உண்டா? தாமதமானால் பாதிப்பு நேருமா?

சு.ரஜினிபிரியன், களம்பூர்.

நேர்த்திக்கடன் என்பது இருவகை. ஒன்று குடும்ப வழக்கப்படி பரம்பரையாகச் செய்வது. இரண்டாவது நாம் வேண்டுதலாகச் செய்வது. குடும்ப வழக்கில் உள்ளதை தள்ளிப் போடாமல் காலத்தில் செய்து விட வேண்டும். பிரச்னையான சூழலில் முடிந்தது, முடியாதது என்றெல்லாம் யோசிக்காமல் எதையாவது வேண்டிக் கொண்டு காரியமான பிறகு, அதைச் செய்ய வேண்டியதில்லை என பலரும் விட்டு விடுகிறார்கள். இது மட்டுமே தவறு. நம்மால் செய்யக் கூடியதை குறிப்பிட்ட காலத்தில் செய்வதாக வேண்டிக்கொள்வதே நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us