தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : செப் 16, 2016 09:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2016 09:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

** நம்பினார் கெடுவதில்லை, நான்குமறை தீர்ப்பு என்பது பற்றி சொல்லுங்கள்.

மாயா, சிதம்பரம்.

இந்து மதத்தின் அடிப்படையே நம்பிக்கை தானே. வேதங்களும், ஆகமங்களும் பூஜை பற்றியும், ஸ்தோத்திரங்கள் பற்றியும் சொல்லும்போது கடைசியில் பலஸ்ருதி என்று ஒரு ஸ்லோகத்தின் வாயிலாகச் சொல்லும். அதில் இந்த பூஜையை நம்பிக்கையுடன் செய்பவர்கள் அல்லது இந்த ஸ்தோத்திரத்தை நம்பிக்கையுடன் சொல்பவர்கள் இன்னின்ன பலன்களை அடைவார்கள்; இது சத்தியம் என்று கூறுகிறது. எனவே இங்கு நம்பிக்கை என்பது இறைவனிடம் உள்ளது போலவே நாம் செய்யும் வழிபாடுகளிலும் இருக்க வேண்டும். இதனை உபநிடதங்கள் 'ஸ்ரத்தயாதேயம்' என்று சொல்கின்றன. இதற்கு சிரத்தையுடனும், நம்பிக்கையுடனும் செய்யும் பூஜை என பொருள். இப்படி நம்பிக்கையுடன் வழிபட்டால், அவர்களது விருப்பங்கள் தாமே அவர்களை வந்தடையும். 'ஒன்றியிருந்து நினைமின்காள் உந்தமக்கு ஊனமில்லை' என்று நாவுக்கரசரும் நான்குமறை தீர்ப்பினை வலியுறுத்துகிறார்.

புகுந்தவீட்டில் நிம்மதியாக வாழ சொல்லவேண்டிய ஸ்லோகம் இருக்கிறதா?

எஸ்.நிசான், விருதுநகர்.

திருமணமான பெண்கள் செய்ய வேண்டிய மங்களகரமான வழிபாடுகள் நிறைய உள்ளன. இவற்றை ஒரு தாய் தன் பெண்களுக்கு திருமணத்துக்கு முன்பே

கற்றுத்தர வேண்டும். இவற்றை குறையாமல் செய்தாலே புகுந்த வீட்டில் நிம்மதியாக வாழலாம். பெண்களைப் படிக்க வைப்பதில் அதிக கவனம் செலுத்தும் பெற்றோர், அவர்களின் திருமண வாழ்க்கைக்கான பயிற்சியை அளிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. ஸ்ரீதுர்க்கா சப்தஸ்லோகீ என்ற ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்யுங்கள். புகுந்தவீட்டு வாழ்க்கை மகிழ்ச்சி தரும்.

* துன்பம் வந்தால் மட்டுமே மனம் பக்தியில் ஈடுபடுகிறது. எப்போதும் கடவுளை நினைக்க என்ன செய்யலாம்.?

ச.பாசிலா, கடலூர்.

காமியம், நிஷ்காமியம் என பக்தியை இருவகையாக சாத்திரங்கள் கூறுகின்றன. ஒரு விருப்பத்தை மனதில் கொண்டு அது நிறைவேற பக்தி செலுத்துவது காமியம். எந்த எதிர்பார்ப்பும் இன்றி நம்மை இப்பூவுலகில் படைத்து நல்வாழ்க்கையை அருளியிருக்கும் சுவாமிக்கு நன்றி செலுத்தும் விதமாக பக்தி செலுத்துவது நிஷ்காமியம். சில விஷயங்களை நாம் கேட்டு கடவுள் தருகிறார். மூச்சு விடுதல், இதயத்துடிப்பு போன்ற சில விஷயங்களை கேட்காமலே தந்திருக்கிறார். இவை நம் ஆயுளின் அடித்தளமல்லவா? இந்த ஒரு நன்மை போதாதா..! நாம் எப்போதும் கடவுளை நினைத்திருக்க! திருஞானசம்பந்தர் அருளிய 'துஞ்சலும் துஞ்சலிலாத போதும்' என்னும் பதிகத்தை பொருள் உணர்ந்து படியுங்கள். பிறகு எப்போதும் கடவுளிடம் பக்தி செலுத்தும் எண்ணம் உங்களது இயல்பாகி விடும்.

* பிறர் குற்றத்தை மன்னிக்கும் பக்குவம் பக்தியால் உண்டாகுமா?

ஆர்.பிரபு, கோவை.

கண்டிப்பாக கிடைக்கும். மனம் குழம்பியவர்கள் தான் குற்றம் புரிகின்றனர் அவர்களால் பாதிக்கப்படுபவர்கள் பக்திமான்களாக இருந்தால் அவர்களது மனம் பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் இழைக்கும் குற்றத்தை பெரிதாகக் கருதாமல் மன்னிப்பதுடன் மறந்து விடும் வலிமையும் மனதிற்கு வந்து விடுகிறது. அமர்நீதிநாயனார் வரலாற்றில், தம்மை வஞ்சகத்தால் வெட்டியவனை மன்னித்ததுடன் அவனைக் காக்கவும் செய்துள்ளார். இது பக்தியால் ஏற்பட்டது தானே.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us