தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : அக் 14, 2016 04:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2016 04:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* சிவன் சுடுகாட்டு சாம்பலைப் பூசுவது ஏன்?

எஸ்.சியாமினி, புதுச்சேரி.

சிவனுக்கு 'ஸ்மசானவாஸீ' (சுடுகாட்டில் வசிப்பவர்) என்று பெயருண்டு. மனிதப் பிறவிக்காக உடலைத் தந்தவர் அவர். அந்த உடலைத் தாங்கும் உயிர்கள், உலகில் வாழும் காலத்தில் நிறைய பாவம் செய்கிறார்கள். இறந்த பிறகு உயிர் மட்டும் மேலே செல்லும். உடல் சாம்பலாகி விடும்.

கருணாமூர்த்தியான சிவன், அந்த உடல்களின் பாவங்களைப் போக்கும் விதத்தில் சுடுகாட்டிற்கே வந்து சாம்பலைப் பூசிக் கொள்கிறார். அதாவது உயிரானது அறிவுப்பூர்வமாக செய்த பாவங்களுக்கு மறுபிறவி என்னும் பரிகாரம் உண்டு. உடல் ரீதியாக செய்த பாவங்களை உலகிலிருந்து அகற்ற, புண்ணியமே வடிவான சிவன் தாமே பூசி அருள்கிறார்.



** காலையில் கணவரும் குழந்தைகளும் தூங்கி எழுவதற்கு முன்பே பூஜை செய்கிறேன். இது சரியா?

டி.பத்மா, கோவை.

காலையில் எழுந்து அன்றாடப் பணிகளை முடித்து பூஜை செய்கிறீர்கள் என்பது பெரிய விஷயம். நீங்கள் செய்யும் பூஜை அவர்கள் நலனுக்காகத் தானே... எனினும் வீட்டில் பூஜை நடக்கும் போது மற்றவர்கள் தூங்குவது நல்லதல்ல. அவர்களும் பங்கு பெற வேண்டும் என்பதை புரிய வைப்பது நல்லது.

* கோவில் கொடிமரத்தின் கீழ் உப்பைக் கொட்டி வழிபடுவது ஏன்?

கே.அனுசூயா, திருவொற்றியூர்.

சரும நோய் தீர உப்பு மிளகை கோவிலுக்குக் காணிக்கை அளிப்பது மரபு. இவற்றைக் கொடிமரத்தடியில் கொட்டி வழிபடுவது தவறு. கோவிலில் இதைப் பெற்றுக் கொள்ள வசதி செய்திருப்பார்கள். அதில் செலுத்தினால் நற்செயல்களுக்கு பயன்படும்.

* நவக்கிரக பரிகாரத் தலங்களுக்குச் செல்ல பணம் இல்லாவிட்டால், அருகிலுள்ள கோவிலில் வழிபட பலன் கிடைக்குமா?

சி.சசிகலா, சென்னை.

குறையில்லாமல் கிடைக்கும். இதற்காகத் தானே எல்லா ஊர்களிலும் எல்லா கோவில்களிலும் நவக்கிரகங்களை வைத்துள்ளார்கள். அங்கும் குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி எல்லாம் கொண்டாடப்படுகிறதே...! 30 ஆண்டுகளுக்கு முன் நவக்கிரக பரிகாரத் தலங்கள் இப்படி பிரபலமாக இல்லை. எனவே

வசதி கிடைக்கும் போது அத்தலங்களுக்கு செல்லுங்கள். மற்றபடி உங்கள் ஊர் கோவிலில் தீபமேற்றி வழிபடுங்கள். உங்களுக்கும், ஊருக்கும் நன்மை

உண்டாகும்.

* படியளக்கும் கடவுளுக்கே நாம் நைவேத்யம் செய்வது ஏன்?

ரோஜா ராஜா, நெய்வேலி.

'நைவேத்யம்' என்ற சொல்லுக்கு 'தெரிவித்தல்' என பொருள். படியளந்த இறைவனுக்கு நாம் நன்றி தெரிவிப்பதே நைவேத்யம். அவரும் உண்ண வேண்டும் என்பது அன்பின் வெளிப்பாடு. ஆனால் கடவுள், நாம் அதைப் பிரசாதமாக உண்பது கண்டு மகிழ்ச்சி கொள்கிறார்.

* திருமணத்தில் நாதஸ்வரத்திற்கு பதிலாக சிலர் செண்டைமேளம் வைப்பது சரியா?

டே.கிருபாதேவி, கோவை.

திருமணம் என்றாலே அதனுடன் இணைந்து வரும் சொல் மங்கள வாத்தியம். இது காலம் காலமாக நாதஸ்வர மேள ஓசையாகவே இருந்து வருகிறது. தற்போது செண்டை வாத்தியமும் சேர்ந்துள்ளது. தவறில்லை. ஆனால் மங்கள வாத்தியத்திற்கு இடையூறாக இருக்கக் கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us