தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : அக் 20, 2016 11:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2016 11:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* அறுபது வயதிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மணிவிழா நடத்துவது ஏன்?

கே.கணபதி, சென்னை.

இது அனைவரும் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய வைபவம். 'ஜன்ம வர்ஷ ஜன்மமாஸ ஜன்ம நட்சத்திர தின புனர்தர்சன சாந்த்யர்த்தம் ஷஷ்ட்யப்த பூர்த்தி சாந்தி ஹோமம் கரிஷ்யே' என்று சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும் என சாந்தி ரத்னாகரம் என்னும் நூல் கூறுகிறது. அதாவது தமிழ் வருடங்கள் அறுபது. ஒருவர் துர்முகி ஆண்டு வைகாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார் என்றால் அவரது அறுபது வயது நிறைவில் மீண்டும் துர்முகி ஆண்டு வரும். அதில் அதே வைகாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று அவரது பிறந்த நாள் மீண்டும் வருகிறது. இது நம் வாழ்வில் காணும் ஒரு அபூர்வமான நாள். மீண்டும் இந்த சேர்க்கையைக் காண 120 வயது வரை இருக்க வேண்டும். எனவே அறுபதாவது பிறந்த நாளில் நாம் கடந்து வந்த 60 வருடங்கள், 12 மாதங்கள், 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், இரண்டு அயனங்கள், ஆறு பருவங்கள், ஆயுள் தேவதை என எல்லா தெய்வங்களுக்கும் பூஜை, ஹோமம் செய்து மீண்டும் ஒருமுறை மனைவிக்கு மாங்கல்யம் சூட்டி பெரியவர்களிடம் ஆசி பெற்றால் எல்லா தோஷமும் நீங்கி நீண்டகாலம் வாழலாம்.

* புது வீடு கட்டுபவர்கள் திருஷ்டி பொம்மை வைப்பது கட்டாயமா?

எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.

ஆமாம். வீட்டைப் பார்ப்பவர்கள் எல்லாருமே சந்தோஷப்பட்டு மனமார வாழ்த்துவார்கள் என்று சொல்ல முடியாதே.... சிலரது பார்வை திருஷ்டி தோஷத்தை உருவாக்குவதை மறுக்க முடியாது. இதற்குப் பரிகாரமாக திருஷ்டி பொம்மை வைக்க வேண்டும்.

* கோவிலில் இருக்கும் பிறர் வைத்த அகலில் எண்ணெய் விட்டு விளக்கேற்றலாமா?

கி.சி.மோகனசுந்தரம், மதுரை.

இதில் ஒன்றும் தவறில்லை. பிறருடைய அகல் என்பதால் நாம் விளக்கேற்றும் புண்ணியம் அவர்களுக்குப் போய் விடும் என பயப்பட வேண்டாம். அதில் எண்ணெய்யும், திரியும் போட்டு விளக்கேற்றினால், உங்களுக்கு நிச்சயம் புண்ணியம் தான்.

* சிலர் வாசலில் கோலமிட்டு அதில் மஞ்சள் குங்குமம் வைக்கிறார்களே... சரிதானா?

ஆர்.சுப்பிரமணியன், கோவை.

தவறு. மாவினால் கோலமிடுவது மங்களத்தை உண்டாக்கும். எறும்பு, குருவி போன்ற உயிர்களுக்கு உணவாகவும் ஆகிறது. இது ஒரு புண்ணிய செயலும் கூட. மஞ்சள், குங்குமம் ஆகியவை பூஜைக்குரியவை. இவற்றை காலில் படும் படியாக கோலத்தில் வைக்கக் கூடாது. அரிசி மாவினால் தான் கோலமிட வேண்டும். அலங்காரத்திற்காக சிலர் கல் மாவை உபயோகிப்பதும் தவறு.

* சன்னிதியில் கண்ணை மூடிக் கொண்டு வணங்கக் கூடாதாமே! ஏன்?

மாயா, சிதம்பரம்.

சன்னிதியில் நின்று சுவாமியை தரிசிப்பது சில மணித்துளிகள் தானே. அந்த நேரத்திலும் கண்ணை மூடிக் கொண்டு நின்றால் எப்படி கடவுளைக் கண்ணாரக் காண முடியும். சிதம்பரம் கோவிலுக்கு சுந்தரர் வரும் போது, நடராஜப்பெருமானின் ஆனந்தக் கூத்தினைக் காண்கிறார். கண்களை இமைக்காமல் அப்படியே மெய் மறந்து நின்று விட்டார். இக்காட்சியை சேக்கிழார் 'ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள' எனத் துவங்கி 'தனிப்பெரும் கூத்தினைக் கண்டு மகிழ்ந்தார்' எனப் பாடி முடிக்கிறார். எனவே சன்னிதியில் நிற்கும்போது கண் மூடி நிற்காமல், தரிசனம் முடித்தபின், கொடிமரம் அருகில் அமர்ந்து சிறிது நேரம் கண் மூடி தியானம் செய்ய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us