தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : நவ 04, 2016 12:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2016 12:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* சில தோஷங்கள் நீங்க பெற்றோரை விட்டுப் பிள்ளைகளைப் பிரித்து வைக்கச் சொல்வது சரிதானா?

தமிழ்க்குமரன், திருவெண்ணெய்நல்லூர்.

சில ஜாதகங்களில் சில தோஷங்கள் இப்படி ஏற்படும். இதை அரிஷ்டதோஷம் என்பர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சேர்ந்து இல்லாமல் பிரிந்து இருந்தால் அந்த தோஷம் பரிகாரமாகி விடும். இல்லையென்றால் விரும்பத்தகாத பிரிவை ஏற்படுத்தும். எனவே இதுபோன்ற சமயங்களில் அனுபவமிக்க ஜோதிடர்களின் அறிவுரையைக் கேட்பது நல்லது.

* பாம்பைக் கொன்றால் நாகதோஷம் உண்டாகுமா?

செ.கவிஸ்ரீ, சிட்லபாக்கம்.

தன்னைக் கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம் என்பது சாத்திரம். அதாவது தெய்வீக சக்தி வாய்ந்த சில பிராணிகளை துன்புறுத்தக் கூடாது என்றாலும், நம் உயிருக்கே ஆபத்தாகவரும் சூழலில் வேறு வழியில்லாததால் அப்படிச் சொல்கிறது. நாமாகத்தேடிச்சென்று கொல்வது நாகதோஷத்தை ஏற்படுத்தும். நம்மைத்தேடி அதுவரும்போது, கூடுமான வரை தப்பிக்க முயல வேண்டும். இன்னும் சொல்லப்போனால், தற்போதுள்ள வசதிகளைப் பயன்படுத்தி பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கலாம்.



** ஊரார் ஒற்றுமையுடன் வாழ சொல்ல வேண்டிய மந்திரம் இருக்கிறதா?

எஸ்.ரங்கராஜன் நெய்வேலி.

ஊரார் மாதம் ஒருமுறையாவது ஒரு கோவிலில் ஒன்று கூடி வழிபட்டாலே போதும். ஒற்றுமையுடன் வாழும் மனநிலையை எல்லோருக்கும் கடவுள் தந்து விடுவார். சுவாமி சன்னிதானத்தில் எல்லோரும் ஒன்று கூடினால் பரஸ்பர விரோதங்கள் மறந்து நட்பு மலரும். பூஜை முடிவில் 'வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க, மன்னன்கோன்முறை அரசு செய்க, குறைவிலாது உயிர்கள் வாழ்க, நான்மறை அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க, மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்' என்ற பாசுரத்தை ஒருவர் சொல்ல மற்ற எல்லோரும் திரும்பச்சொல்லும் கூட்டு வழிபாட்டையும் நிகழ்த்தினால் யாராலும் பிரிக்க முடியாத ஒற்றுமை ஊராக அவ்வூர் திகழும்.



* பிரதோஷம், மஹா பிரதோஷம் இரண்டும் ஒன்றா, வேறுவேறானவையா?

வெ.பரமசிவன், சென்னை.

நித்ய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மாச பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளய பிரதோஷம் என ஐந்து வகை பிரதோஷங்கள் உள்ளன. தினமும் மாலை 4:30 - 6:00 மணி வரையிலான காலத்திற்கு நித்ய பிரதோஷம் என்று பெயர். வளர்பிறை திரயோதசி திதியன்று மாலை பட்சப் பிரதோஷம். தேய்பிறை திரயோதசியன்று மாலை மாச பிரதோஷம். இந்த மாச பிரதோஷம் சனிக்கிழமையன்று வந்தால், அது மகா பிரதோஷம். மகா பிரளயம் ஏற்பட்டு உலகம் அழிவது பிரளய பிரதோஷம். இந்த ஐந்து பிரதோஷங்களில் கடைசியை மட்டும் நாம் இன்னும் பார்க்கவில்லை.

* கோவில் நந்தவனத்தில் பறித்த பூக்களை வீட்டு பூஜைக்கு எடுத்து வரலாமா?

ரா.ரங்கசாமி வடுகப்பட்டி.

கோவிலுக்கென்று உள்ள எதையுமே வீட்டு உபயோகத்திற்கு எடுப்பது தவறு. கோவில் நந்தவனத்தை நாமே பராமரித்து பூக்களைப்பறித்துக் கொடுப்பது மிக புண்ணியமான செயல்.



* சுவாமிக்கு ரூபாய், காய்கறிகளால் அலங்காரம் செய்வது ஏன்?

பத்மா, சென்னை.

ஆனிமாதம் பவுர்ணமியில் பழங்கள், காய்கறிகளால் சுவாமிக்கு அலங்காரம் செய்யவேண்டும் என ஸூக்ஷ்மாகமம் மாஸாபிஷேக விதிபடலத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் நமக்கு கடவுள் அருளியிருக்கிற காய்கறிகளால் நன்றி செலுத்தும் முகமாக இது செய்யப் படுகிறது. ரூபாய் நோட்டு என்பதை காகிதமாக பார்க்கக்கூடாது. அதைக் கொடுத்தால் தான் தங்கத்தை வாங்கமுடியும். எனவே ஸுவர்ணபுஷ்பமாகக் கருதி அவற்றாலும் அலங்கரிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us