தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : டிச 02, 2016 10:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 02, 2016 10:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

** திருமணத்தில் விருந்து என்ற பெயரில் உணவு அதிகம் வீணாகிறதே! இதை சாஸ்திரம் அனுமதிக்கிறதா?

ஆர்.பாலிகா, சென்னை.

திருமணத்திற்கு இத்தனை பேர் தான் வருவார்கள் என்பதை யாராலும் வரையறுக்க முடியாது. இது போதும் என்று குறைவாகச் செய்து விட்டு பின்னால் வருபவர்களுக்கு உணவு இல்லை என்று கூறவும் கூடாது. நீங்கள் கேட்பதும் நியாயமான கேள்வி தான். சமையல் கலைஞர்களின் பொறுப்பும் இங்கு அதிகம். சில கலைஞர்கள் வருகிற உறவுகளை கணக்கிட்டும், தேவையென்றால் தாமதமில்லாமல் செய்தும் தருவார்கள். இப்படி செய்தால் உணவு வீணாவதைத் தடுக்க முடியும். இதற்கு மேலும் வீணாவதை, தவிர்க்க முடியாத தவறாகத் தான் கொள்ள முடியும். சாஸ்திரங்கள் இது போன்ற விஷயங்களை அனுமதிப்பதில்லை. மிச்சம் வந்தால் தானம் செய்து விடலாம். சாலையோரங்களில் கொட்டி, அதன் மூலம் கிருமிகளை பரவச் செய்வது போன்ற செயல்கள் பாவத்தையே தரும்.

சுப்ரமணிய ஷோடச நாமாவளியில் 'ஓம் ப்ரம்மசாரிணே நம:' என்று வருகிறது. முருகனை ப்ரம்மசாரி என்பது சரியா?

எஸ்.திருமலை, கோயம்புத்தூர்.

முருகன் பிரம்மசாரியாக இருந்து சூரனை அழித்த பிறகே தேவசேனா, வள்ளியை மணம் புரிந்தார். பழநியில் ஆண்டிக் கோலத்தில் காட்சி தருகிறார் என்பதற்காக அவரை அப்படியே மட்டும் வழிபடாமல் இரு தேவியரோடு திருமணக்கோலத்திலும் வழிபடுகிறோம் அல்லவா? விநாயகரும் இப்படித் தான்.

பிரம்மசாரியாகவும், வல்லபை கணபதியாகவும் வழிபடப்படுகிறார். இன்னொரு விஷயம். சுப்ரமணியருடைய ஷோடச நாமாவளியில் இடம் பெற்றிருப்பதை 'பிரம்மசாரி' என்று பொருள் கொள்ளக்கூடாது. அது பிரம்ம சாஸ்தா. அதாவது 'ஓம்' என்னும் மந்திரத்தின் பொருள் தெரியாத

பிரம்மனைத் தண்டித்தவர் என்று பொருள்.



* குளம், கடல், அருவி போன்ற இடங்களில் உள்ள கோவில்கள் பிரபலமாக இருப்பது ஏன்?

பி.ராஜேஸ்வரி, மதுரை.

குளம், கடல், அருவி போன்றவை கோவில் வரலாற்றுடன் தொடர்புடையதாக இருக்கும். உதாரணமாக ராமேஸ்வரம் கோவில் வரலாற்றுடன் தொடர்புடையது கடல். அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயர். குற்றாலம் கோவில் அருவியுடன் தொடர்புள்ளது. கும்பகோணம் கோவில் மகாமகக்குளத்துடன் தொடர்புள்ளது. தீர்த்த மகிமையால் கோவில்களும், கோவில் மகிமையால் தீர்த்தங்களும் பிரபலமாக இருப்பதற்கு புராண வரலாற்றுச் செய்திகளே அடிப்படை காரணம்.

* ஹோமப்புகையை சுவாசிப்பதால் கிடைக்கும் நன்மை என்ன?

டி.மனோன்மணி, உடுமலை.

ஹோமத்தை 'மணி மந்திர ஔஷதம்' என்று சொல்வார்கள். உடல், மனம் சார்ந்த நோய், கிரக பாதிப்பு, செய்வினை, தோஷம் முதலியவற்றை போக்கி நன்மை உண்டாக முன்னோர்களால் கையாளப்பட்டதே ஹோமம். ஹோமம் என்பது மந்திரம், ஔஷதம் என்னும் மருத்துவ மூலிகை இணைந்த ஒன்றாகும். இந்தப் புகையை சுவாசிப்பதால் எல்லா பாதிப்புகளிலிருந்தும் விடுபட்டு நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வீட்டில் சிவபூஜை செய்யத் தகுதி ஏதுமுண்டா?அனைவரும் செய்யலாமா?

கே.மாலதி, சென்னை.

சாதாரணமாக வீட்டில் சிவலிங்கம் வைத்து அபிஷேகம், பூஜை செய்வது பொதுவான விஷயம். சிறப்பாக சிவபூஜை செய்தல் என்பதற்கு தனி வழிமுறைகள் உள்ளன. இதைத் தக்க குருநாதரிடம் தீட்சை பெற்று விதிமுறைகளைக் கற்றுக் கொண்டு செய்வது தான் முறையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us