தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஜன 27, 2017 12:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2017 12:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நான் அரபு நாட்டில் வேலை செய்கிறேன். இங்கு வீட்டிலேயே தெய்வங்களை நினைத்து வழிபட மந்திரம் இருந்தால் சொல்லுங்கள்.

மயில்வாகனன், மதுரை.

மந்திரங்கள் நிறைய உள்ளன. இவற்றைத் தொகுத்து பல புத்தகங்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன. அவற்றை வாங்கி உங்களுக்கு இஷ்டமான தெய்வத்தின் மந்திரத்தை தெளிவாகச் சொல்லி வழிபாடு செய்யலாம். மேலும் அரபு நாடுகளில் பணிபுரிபவர்கள், அவர்கள் குடியிருக்கும் பகுதியில் வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை ஒன்று கூடி கூட்டுவழிபாடு நிகழ்த்துவதாகவும் அதற்கு அந்த அரசாங்கம் அனுமதி வழங்குவதாகவும் துபாயில் வேலை பார்க்கும் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். நீங்களும் இதனை முயற்சிக்கலாமே!

* புதுமனை புகுவிழாவில் கணபதி ஹோமம் நடத்துவது ஏன்?

பி.ஜெயஸ்ரீ கடலூர்.

புதுமனை என்பது புதிய சிலை போன்றது. புதிய தெய்வசிலைக்கு சக்தியை வரவழைக்க கும்பாபிஷேகம் செய்வது போல் புதுமனைக்கும் தெய்வீக சக்தியால் சுபிட்சம் நிலைத்திருக்க கணபதிஹோமம், நவக்கிரஹ ஹோமம், லட்சுமி ஹோமம் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.

** பழிவாங்கும் உணர்வில் இருந்து விலக சிறப்பு வழிபாடு ஏதுமிருக்கிறதா?

டி.ஜெய்சிங், கோவை.

நமக்கு ஒருவர் கெடுதல் செய்தால் கோபத்தின் வெளிப்பாடாக பழி வாங்கும் உணர்வு உண்டாகிறது. எந்த செயலும் விதி வசத்தால் ஏற்பட்டதே தவிர, குறிப்பிட்ட நபரால் உண்டாவதில்லை என்பதை உணர்ந்தால் கோபம் தணியும். தவறு செய்தவருக்கு தண்டனை அளிப்பது கடவுளின் பொறுப்பு. பழி உணர்வு மனதில் எழும் போது, இஷ்ட தெய்வத்தை நினைத்து தியானம் செய்தால் மனம் ஒருநிலைப்படும். தீய உணர்வில் இருந்து விடுபடும்.

* சுவாமிக்கு அபிஷேகம் செய்த பாலை வீட்டில் உபயோகப்படுத்தலாமா?

ஜனனி ராம், சென்னை.

ஏழைகளுக்கு அதை பிரசாதமாகக் கொடுங்கள். வீட்டுக்கு கொண்டு வந்தாலும் உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுங்கள். சுவாமிக்கு படைக்கும் எதுவானாலும் அர்ப்பண உணர்வுடன் மற்றவர்களுக்கு தரப்பட வேண்டும். நாம் சிறிதளவு பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம்.

பூஜையறையில் பிளாஸ்டிக் பொம்மை கடவுள்களை வைத்து வழிபடலாமா?

கே.ராமசாமி, குன்னூர்.

பிளாஸ்டிக்கில் செய்த கடவுள் பொம்மைகளை வரவேற்பு அறையில் அழகுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். கல், மண், பளிங்கு, உலோகத்தால் ஆன சிலைகளை மட்டுமே பூஜையறையில் வைத்து வழிபடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us