தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : பிப் 10, 2017 11:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2017 11:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பவுர்ணமி கிரிவலம் திருவண்ணாமலை தவிர்த்த மற்ற மலைக் கோவில்களுக்கும் பொருந்துமா?

பொ.பாலாஜி, அண்ணாமலைநகர்.

மலைக்கோவில்கள் எல்லாமே அக்கோவிலின் இறைவன் வடிவமாகப் போற்றப்படுகின்றன. கிரிவலம் என்ற நிலையில் திருவண்ணாமலை முதன்மை பெற்றிருந்தாலும், திருப்பரங்குன்றம், பழநி உள்ளிட்ட கோவில்களிலும் நடக்கிறது. மலை இருக்கும் இடமெல்லாம் இது பரவ வேண்டும்.

வீட்டில் எந்த பூஜை செய்தாலும் மஞ்சள் பிள்ளையார் வைத்து வணங்குவது ஏன்?

எம்.கிருபானந்தன், புதுச்சேரி.

விநாயகருக்கு பூஜை செய்து துவங்கினால் தான், எந்த திட்டமும் தடையின்றி முடியும். அத்துடன் நமது செயல்கள் மங்களகரமாக அமைய மஞ்சள் பிள்ளையாரை வைத்து வணங்குவது மரபு. இதுதவிர சந்தனம் மற்றும் தர்ப்பையினாலான கூர்ச்சத்தாலும் விநாயகரை செய்து கொள்ளலாம்.



** பிறர் கவனத்தைத் திருப்பும் விதத்தில் ஆரவாரமாக கோவிலில் வழிபாடு செய்வது சரியா?

அ.கிருஷ்ணசாமி, திருப்பூர்.

ஆரவாரம் என்று தாங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை. ஆண்டவன் முன் எல்லோரும் சமம். அனைவருக்குமே ஒரே மாதிரி கவுரவம் செய்யப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் பொதுவானவை. பாதுகாப்பு தேவைப்படுகின்ற பிரமுகர்கள் தரிசனத்துக்கு வந்து செல்லும்போது கொஞ்சம் பரபரப்பான சூழல் ஏற்படும். மேலும், அன்றைய வழிபாட்டின் உபயதாரர்கள் பக்தி மிகுதியால் சுவாமிக்கு விரும்பி செய்யும் சில விஷயங்கள் சற்று ஆரவாரத்தை ஏற்படுத்தலாம். தவிர்க்க முடியாத இதுபோன்ற ஒருசில விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ளாத பட்சத்தில், திசைதிருப்பும் ஆரவாரம் என்று சொல்ல வேண்டிய அவசியம் வராது. நாம் வந்த வேலை சுவாமியை தரிசிப்பது. அதில் முழுக்கவனத்தை செலுத்தி விட்டால், எந்த ஆரவாரமும் நம் கவனத்தை திசை திருப்ப முடியாது.

* பெரியவர்களை வணங்கும் போது, அவர்களது காலைத் தொடலாமா?

ஜி.கிருத்திகா, கூடுவாஞ்சேரி.

நமஸ்காரம் செய்து ஆசி பெறுவது தான் மரபு. காலைத் தொட்டு வணங்க வேண்டும் என்பதில்லை. சில பெரியவர்கள் இதனால் தர்மசங்கடத்துக்கும் ஆளாகிறார்கள். பூஜை, புனஸ்காரம் ஆசாரம் என்றிருப்பவர்கள் தம்மை பிறர் தொடுவதை விரும்புவதில்லை.

ருத்ராட்சம் அணிந்தால் திருமணம் தள்ளிப்போகும் என்கிறார்களே! உண்மையா?

கு.பெருமாள் சென்னை.

இது அபத்தமான தகவல். பாவை நோன்பு இருந்து நல்ல கணவனை வாழ்க்கைத்துணையாக அருளுமாறு பெண்கள் வேண்டுவதாக, மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் பாடுகிறார். அதில் அப்பெண்கள் தாங்கள் விரும்பும் மணமகனை அடையாளம் காட்டும் அற்புத வரிகளை சிந்திப்போமே! ' உன் அடியார் தாள் பணிவோம். ஆங்கவர்க்கே பாங்காவோம். அன்னவரே என் கணவராவார்' இங்கு அடியார் என்று குறிப்பிட்டு, அவர்கள் விரும்பியிருப்பது விபூதி, ருத்ராட்சம் அணிந்த சிவத்தொண்டர்களைத் தான். பெண்களே விரும்பும் ஒன்றினால் திருமணம் எப்படித் தள்ளிப் போகும்?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us