தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : மார் 03, 2017 02:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2017 02:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யதாஸ்து என்பதன் பொருள் என்ன? இதை சொல்லும் தேவதைகள் இருப்பது உண்மைதானா?

அ.கிருஷ்ணசாமி, திருப்பூர்.

அது யதாஸ்து இல்லை... ததாஸ்து. ததா=அப்படியே, அஸ்து=ஆகட்டும், 'அப்படியே ஆகட்டும்' என்று பொருள். 'மங்களம் உண்டாகட்டும்' என்று பெரியவர்கள் ஆசிவழங்கும் போது, அப்படியே ஆகட்டும்' என்ற பொருளில், கூறுவார்கள்.

* விளக்கில் எண்ணெய் இல்லாமல் திரி எரிந்து விட்டால் அபசகுனமா? அதற்குரிய பரிகாரம் என்ன?

ஆர்.ராஜநந்தினி, மதுரை.

திரி கருகும் அளவிற்கு எண்ணெய் ஊற்றாமல் கவனிக்காமல் இருப்பது தவறு. அவ்வப்போது கவனித்து எண்ணெய் விட்டும் திரியைத் தூண்டியும் வரவேண்டும். அறியாமல் இதுபோல் ஏற்படும் தவறுகள் எல்லாம் பாவமாகி விடாது.

** மனித உடலை கடவுள் குடியிருக்கும் கோவில் என்று கூறுவது சரிதானா?

வி.மஞ்சுளா, விழுப்புரம்.

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம். வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே என்பது திருமூலர் திருமந்திரம். நமது உடம்பே ஆலயம். உள்ளமே கருவறை. உயிரே சிவலிங்கம். ஐம்புலன்கள் தீபங்கள் என்பது அப்பாடலின் பொருள். எனவே நமது உயிராக இறைவன் இருப்பதால், இந்த உடலே அவன் குடியிருக்கும் கோவில் என்பதில் சந்தேகமில்லை.

பெருமாள் தவிர்த்த மற்ற தெய்வங்களுக்கு துளசி மாலை சாத்தலாமா?

கே.கோவிந்தராஜன், வண்டலூர்.

துளசியும், வில்வமும் எல்லா தெய்வங்களுக்கும் பொதுவானவை. துளசி பெருமாளுக்கும், வில்வம் சிவனுக்கும் உகந்தவை. மற்ற தெய்வங்களுக்கு சாத்தலாம்.

பூஜையறையில் விளக்கு எரியும் நிலையில் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் செல்லலாமா?

எஸ்.பி.பாலபாரதி, சென்னை.

வீடுதிரும்பும் வரையில், விளக்கு எரியுமானால் செல்லலாம். தாமதமாகும் என்றால் அமர்த்தி விட்டுச் செல்வது நல்லது.

கோவிலில் இரவில் ஹோமம் நடத்த ஆகமம் அனுமதிக்கிறதா?

பி.குமார், மதுரை.

உற்சவம், கும்பாபிஷேகம் நடத்தும் காலங்களில் மாலையில் துவங்கி இரவு ஹோமத்தைப் பூர்த்தி செய்யலாம். மற்ற எந்தக் காரணங்களுக்கும் இரவு ஹோமம் நடத்த ஆகமம் அனுமதிக்கவில்லை.

சுவாமியின் திருநாமத்தை தீட்டு நாட்களிலும் ஜபிக்கலாமா?

க.ஜோதி, கோவை.

முருகா, ராமா, சிவா போன்ற திருநாமத்தை எப்போதும் உச்சரிக்கலாம். குருநாதரிடம் உபதேசம் பெற்ற மந்திரங்களை மட்டும் தீட்டு நாட்களில் ஜபிக்கக்கூடாது.

* நதிகளில் சிலமட்டும் புனிதமானவைகளாகச் சொல்லப்படுவது ஏன்?

கே.ஆர்.பத்மா, சென்னை.

எல்லா நதியும் புனிதமானவை. நதிகளுக்கு புராண வரலாறு உண்டு. இருகரைகளிலும் கோவில் இருப்பின் புனிதம் பெறுகின்றன. இவற்றிலிருந்து பிரியும் கிளை நதிகள் புராண வரலாற்றில் இடம் பெறாததால் புகழ் பெறவில்லை. நதிகளை சுத்தமாக பராமரித்தாலே சுபிட்சம் உண்டாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us